“நான் பிஜேபி காரன்..தகராறு செய்வேன்”- முதல்வர் ஸ்டாலின் வருகையின்போது போலீஸை மிரட்டிய பாஜக நிர்வாகி!
திருப்பூர் : முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வருகையின்போது "நான் பிஜேபி காரன்.. தகராறு பண்ணுவேன்" என திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று காலை கோவையில் இருந்து பல்லடம் சாலை வழியாக திருப்பூருக்கு வந்தார்.
அப்போது, திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் வந்த முதல்வர் ஸ்டாலின்
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான 'தோள் கொடுப்போம் தொழிலுக்கு' என்ற மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை திருப்பூர் வந்தார். முன்னதாக பல்லடம் சாலை வழியாக திருப்பூருக்கு முதல்வர் வருவதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலையோரம் நின்ற வாகனங்களைஅப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வண்ணம் போக்குவரத்தை சீர்படுத்தி வந்தனர்.

தள்ளி நிறுத்துங்க
அப்போது பல்லடம் சாலையில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் இனிப்பு வாங்குவதற்காக திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் வந்துள்ளார். சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்ற அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து போலீசார் வாகனத்தை எடுத்து தள்ளி நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

நான் பாஜக காரன்
ஆனால், தனது வாகனத்தை எடுக்க முடியாது எனக் கூறிய அவரிடம், எங்கள் கடமையைச் செய்ய விடுங்கள் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார். ஆனால், ஏற்காத அவர், "நான் பிஜேபி காரன்.. தகராறு செய்வேன் திமுக அடாவடி என தகராறு செய்வேன் நான் நினைத்தால் ஆயிரம் பேரை கொண்டு வந்து சாலை மறியல் செய்வேன்" என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எகிறிய பாஜக நிர்வாகி
இந்த வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வந்த நிலையில், பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பாஜக பிரமுகர் எகிறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications