"மானங்கெட்ட உலகம் இது".. பேஸ்புக்கில் லைவ் போட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய டிரைவர்.. ஷாக்!
திருப்பூர் இளைஞரின் பேஸ்புக் தற்கொலை லைவ் வீடியோ.. ஷாக்!
திருப்பூர்: "மானங்கெட்ட உலகம் இது.. உயிர் மயிருக்கு சமம்.. யாரும் ஃபீல் பண்ணாதீங்க" என்று லெட்டர் எழுதி வைத்துவிட்டு, ஃபேஸ்புக் வீடியோவை ஆன் செய்துவிட்டு, தூக்கில் தொங்கிவிட்டார் ஒருவர்.. தூக்கு போட்டு கொண்டு தொங்கும் காட்சி அப்படியே லைவ்-ஆக வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார்.. இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருபவர்.. இவரது மனைவி சுகாசினி.. 13 வயதில் நவநீத் என்ற மகன் இருக்கிறான்.

திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். சுகாசினியும் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் தாராபுரத்தில் உள்ள அப்பாவுக்கு ராம்குமார் திடீரென போன் செய்தார்.. "நான் தற்கொலை செய்துக்க போறேன்.. என் பையனை பத்திரமா பாத்துக்குங்க" என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பா, திரும்பவும் போன் செய்தால், அவர் எடுக்கவே இல்லை.
இதற்கு பிறகு ராம்குமார் தன்னுடைய ஃபேஸ்புக்கில் வீடியோவை ஆன் செய்தார்.. ஒரு சேர் எடுத்து போட்டு கொண்டு, கையில் ஒரு துணியை எடுத்து கொண்டு, ஏறுகிறார் ராம்குமார்.. துணியின் ஒரு முனையை தன் கழுத்திலும், இன்னொரு முனையை அங்குள்ள ஃபேனிலும் மாட்டுகிறார்.. அடுத்த செகண்ட் தொங்கியும் விடுகிறார்.. லைவ் வீடியோவில் இது அப்படியே பதிந்துள்ளது.

இந்த லைவ் தற்கொலையை பார்த்ததும், ஃபேஸ்புக் நண்பர்கள் பதறி விட்டனர்.. உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் சொன்னார்கள்.. வேலை பார்த்து கொண்டிருந்த சுகாசினி அலறி அடித்து கொண்டு ஓடிவந்தார்.. ஆனால் ராம்குமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.. உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றும் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
தகவலறிந்து அனுப்பர்பாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், தற்கொலைக்கு முன்பு ராம்குமார் ஒரு லட்டர் எழுதி வைத்திருந்தார்.. "மானம் கெட்ட உலகம்.. இதில் வாழ எனக்கு விருப்பம் இல்லை.. இந்த உயிர் மயிருக்கு சமம்.. யாரும் பீல் பண்ணாதீங்க.." என்று தெரிவித்திருந்தார்.

அந்த கடிதத்தை வைத்து தொடர் விசாரணை நடக்கிறது.. ராம்குமாருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. ஆனால் தற்கொலையின்போது, போதையில் இருந்ததாக சொல்கிறார்கள்.. தற்கொலைக்கான காரணத்தை விசாரித்தும் வருகின்றனர்.. ஃபேஸ்புக்கில் லைவ் தற்கொலை வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியுடன் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications