ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லையாம்..சொல்கிறார் ஜி.கே.வாசன்..
திருப்பூர்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் த.மா.கா.நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அபோது பேசிய அவர், வரும் தேர்தல்களிலும் அதிமுகவுடன் வைத்திருக்கும் கூட்டணியை தொடர்வோம் எனக் கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் வாக்குகள் சிதறி ஆட்சிக்கும், கட்சிக்கும் பாதிப்பு வந்துவிடுமோ என திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளே உள்ளூர கவலையில் உள்ள நிலையில், ரஜினியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என ஜி.கே.வாசன் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வெளிநாடு பயணம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது தமக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்துக்கு வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவர எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், நாகரீகமற்ற கருத்துக்களை அரசியல் கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கோவை-திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பொருளாதார விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சீராக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications