திருப்பூர் பெட்டிக்கடையில் அரைகுறை உடையில் திருநங்கை ஸ்ரேயா! எதிர்வீட்டுக்காரர் கோபத்தில் செய்த வேலை
திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலைப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், இப்போது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாக இரு தரப்பிலும் நீடித்து வந்த அற்பமான முன்விரோதம், இன்று ஒரு உயிரையே பறித்திருக்கிறது. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வந்தாலும், சம்பவ அதிர்ச்சி இன்னும் திருப்பூரை விட்டு போகவில்லை.. யாரிந்த ஸ்ரேயா? என்ன நடந்தது ஸ்ரேயாவுக்கு?
திருப்பூர் கல்லூரிசாலை பகுதியில் வசித்து வருபவர் 40 வயது திருநங்கை ஸ்ரேயா.. இவரது எதிர் வீட்டில் சுப்பிரமணி என்ற 63 வயதுடைய நபர் வசித்து வருகிறார்..

சுப்பிரமணியனின் மகன் சரவணன்.. இவருக்கு 40 வயதாகிறது. ஆனால், சுப்பிரமணியன் குடும்பத்துக்கு ஸ்ரேயாவை கண்டாலே பிடிக்காதாம்.
அரைகுறை டிரஸ்ஸில் ஸ்ரேயா
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியிலுள்ள தன்னுடைய வீட்டின் அருகிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார் ஸ்ரேயா.. தனது பெட்டிக்கடையில் ஸ்ரேயா அரைகுறை டிரஸ் அணிந்து அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இது எதிர்வீட்டு 63 வயதான சுப்பிரமணியத்துக்கு பிடிக்கவில்லை.. எனவே ஸ்ரேயாவை நேரடியாகவே வந்து கண்டித்திருக்கிறார்.
பெட்டிக்கடை வியாபாரம்
தன்னுடைய வீட்டில் குழந்தைகள், பெண்கள் உள்ளதால், இப்படியெல்லாம் அரைகுறை டிரஸ்ஸுடன் பெட்டிக் கடையில் உட்கார வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.. இந்த சம்பவத்துக்கு பிறகுதான், ஸ்ரேயாவிற்கும் சுப்பிரமணி குடும்பத்திற்கும், அடிக்கடி தகராறு, சண்டைகள் வெடித்து வந்தள்ளன..
இந்த சம்பவம் தொடர்பான பிரச்சனையில், ஸ்ரேயா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுவிட்டார்.. ஆனாலும் போலீசார் ஸ்ரேயாவை காப்பாற்றி விட்டனர்.. இதற்கு பிறகு மறுபடியும் தன்னுடைய பெட்டிக்கடை வியாபாரத்தை பார்த்து வந்துள்ளார் ஸ்ரேயா..
இந்நிலையில், கடந்த 6ம் தேதி மீண்டும் ஸ்ரேயாவிற்கும் எதிர்வீட்டை சேர்ந்த சுப்பிரமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுப்பிரமணியுடன், அவருடைய மகன் சரவணனும் சேர்ந்து ஸ்ரேயாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். ஸ்ரேயாவும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
சீரியஸ் திருநங்கை ஸ்ரேயா
ஆனால், தந்தை, மகன் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன், ஸ்ரேயாவை வேண்டுமென்றே கீழே தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. இதில் ஸ்ரேயாவுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.. மேலும், ஸ்ரேயாவிற்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்..
ஆனால், ஸ்ரேயா நிலைமை சீரியஸாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. அங்கு சிகிச்சை பெற்று வந்த திருநங்கை ஸ்ரேயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்..
தந்தை - மகன் கைது
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியம், சரவணன் இருவரையும் கைது செய்தனர்..
அரைகுறை ஆடைகளுடன் பெட்டிக்கடையில் திருநங்கை உட்காருகிறார் என்று துவங்கிய இந்த பிரச்சனை கொலை வரை சென்றுவிட்டது கல்லூரிச் சாலைப் பகுதி மக்களை திகைப்பிலும், துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. இப்போது தந்தை, மகன் இருவருமே இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications