அதிமுக இப்போது வட்டார கட்சி.. நாளைக்கு ஜாதி கட்சி... எடப்பாடி பழனிசாமி மீது டிடிவி தினகரன் அட்டாக்
திருப்பூர்: அதிமுகவை இப்போது வட்டார கட்சியாக மாற்றி வைத்துள்ளனர்.. நாளை ஜாதி கட்சியாக மாற்றிவிடுவர் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி உள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: அவசர கதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

உதயநிதி ஸ்டாலினை இப்போது அமைச்சராக்கி உள்ளனர்; வரும் காலத்தில் 2 முதல்வர்களை ஒரே வீட்டில் இருந்து கூட அறிவிப்பார்கள். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என கூறியிருந்தார். இப்போது உதயநிதி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
திமுகவினருக்கு பதவி கிடைக்காதது குறித்து ஆர்.எஸ். பாரதி பேசியிருந்தார். நாங்கள் எல்லாம் கட்சிக்கு பல தலைமுறைகளாக உழைக்கிறோம்.. ஆனால் புதியதாக வந்தவர்களுக்குதான் முக்கிய பதவிகள் கிடைக்கிறது என ஆர்.எஸ்.பாரதி பேசினார். அவரது மனக்குமுறல் திமுகவில் பலருக்கும் இருக்கிறது. திமுகவில் திடீரென சேர்ந்தவர்கள் எல்லாம் அமைச்சர்களாகின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கான அமமுக கூட்டணி குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம். அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். எடப்பாடியையும் ஓபிஎஸ்ஸையும் இணைத்து வைத்தவர்கள் யாரோ அவர்கள்தான் இப்போதும் அதிமுகவை ஒன்றிணைக்க முடியும்.
அண்ணா திமுகவான 234 தொகுதிகளிலுமே போட்டியிடும் வலிமை கொண்ட கட்சியாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் அதை ஒரு வட்டார கட்சி நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர்; இது எதிர்காலத்தில் ஒரு சமூக கட்சியாக- ஜாதிய கட்சியாக மாறும் நிலைமை உள்ளது. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
-
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி












Click it and Unblock the Notifications