பூனைக்குட்டியைப் போர்வைக்குள் மூடி வைக்கிறார்கள்! அது வெளியே வரும்! விஜய்யை கடுமையாக சாடிய சிபிஎம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு காரணம் தமிழக வெற்றிக் கழகம்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சாடியிருக்கிறது. இந்நிலையில், பூனைக்குட்டியைப் போர்வைக்குள் மூடி வைக்கிறார்கள்! அது வெளியே வரும்! முதலமைச்சர் விஜய்யை சிபிஎம் கடுமையாக சாடியுள்ளது.

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "இந்த தேர்தல், தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் தேர்தல். குறிப்பாக தவெக கட்சியினுடைய அணுகுமுறையின் காரணமாகத்தான் இந்த இடைத்தேர்தல் என்பதே வந்திருக்கிறது.

TVK

அதிமுகவின் சார்பில் நின்று வெற்றி பெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல் ஆதாயம் கருதி, அவர்களை ராஜினாமா செய்ய வைத்து.. இன்றைய தினம் இந்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான முழு பொறுப்பையும் தவெக தான் ஏற்க வேண்டும். ஒருவேளை இவர்கள் அந்த மாதிரி எந்த விதமான உறுதிமொழியையும் அவர்களுக்கு வழங்கவில்லை என்று சொன்னால்.. நிச்சயமாக அவர்கள் ராஜினாமா செய்திருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. ஆகவே இந்த தேர்தல் வந்ததற்கு அடிப்படையான காரணம் தவெக கட்சிதான்.

அவங்க ரெண்டு பேரும் ராஜநாமா பண்ணாம, அதிமுகவில் இருந்து விலகி.. சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இடைத்தேர்தல் வந்திருக்காது. எதற்காக ராஜினாமா செய்தார்கள்?

தவெகவால் என்ன உறுதிமொழி கொடுக்கப்பட்டதால் அவர்கள் ராஜினாமா செய்தார்கள்? அந்த ரகசிய வெளியே வரணும். பூனைக்குட்டியை போர்வைக்குள் ஒளித்து வைத்திருக்கிறார்கள். என்னைக்கு வெளியே வரும் என தெரியவில்லை.. வெளியே வரட்டும். பொது தேர்தலுக்கு முன்பாக இருந்த போன்ற.. ஆதரவு நிலைமை இப்போது தவெக கட்சிக்கு இல்லை. கடந்த 10, 20 நாட்களாக.. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்பது அதற்கு மிகச் சிறந்த சாட்சி.

நிச்சயமாக தவெக ஆட்சிக்கு எதிரானதாகத்தான் இரண்டு தொகுதியின் தேர்தல் முடிவுகளும் இருக்கும். பொது தேர்தலில் முதல்வர் விஜய் எத்தனை தொகுதிக்கு வந்தாரு? இப்போது வந்து முகத்தை காட்டுகிறார். முகத்தை காட்டினால்தான் ஜெயிக்க முடியும் என்பதே அவர்களின் பலவீனம்தானே! அதுவும் ஒருமுறை கிடையாது.. தாராபுரத்துக்கு 2 முறை வரப்போவதாகத்தானே சொல்கிறார்கள். 5 நிமிடத்தில் அதிசயத்தை நடத்துபவர்.. இப்போது எதற்காக 2 முறை வர வேண்டும்? அப்படியெனில் அவர்கள் தரப்பில் பலவீனமாக இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?

ஆதரவு நிலைப்பாடு

நாங்கள் ஏற்கெனவே சொன்னதை போல, தவெக அரசுக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். இந்த தேர்தல் முடிவுகள் என்ன மாதிரியாக இருந்தாலும், நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுப்போம். இந்த 2 தொகுதிகளிலும் மக்கள் இடதுசாரிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்க வேண்டும். இது தொழிலாளர் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும்" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+