திருப்பூர்: விஜய்யின் காரை பைக்கில் விரட்டிய தவெக தொண்டர்கள்! அடுத்தடுத்து விபத்தில் சிக்கி படுகாயம்
திருப்பூர்: விஜய் இன்று ஈரோடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது விஜய் காரை தவெக தொண்டர்கள் பலரும் டூவீலரில் பின் தொடர்ந்தனர். அப்போது திருப்பூர் பல்லகவுண்டம்பாளையம் அருகே மேம்பாலத்தில் விஜய் கார் சென்ற போது டூவிலர்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
முதலில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி கீழே விழுந்த நிலையில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்ற இருசக்கர வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடுக்கு காரில் வந்த விஜய்
ஈரோடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை 8 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து கிளம்பினார். காரில் புறப்பட்ட அவர் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். பின்னர் தனி விமானத்தில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
பின்னர் கோவையில் இருந்து ஈரோடு சத்தியமங்கலம் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதிக்கு காரில் வந்தார். ஏற்கனவே விஜய் காரை யாரும் பின் தொடரக் கூடாது என தவெக தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவுறுத்தல் விடப்பட்டு இருந்தது. எனினும் தவெக தொண்டர்கள் பலர் டூவீலரில் விஜய் காரை பின் தொடர்ந்து வந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காரில் பின் தொடர்ந்தனர்.
விஜய் காரை விரட்டிய தொண்டர்கள்
இதேபோல் ஆங்காங்கே சாலைகளிலும் விஜய்யை காண பொதுமக்கள், தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது அவர்களை நோக்கி விஜய் கையசைத்தபடி வந்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு மீண்டும் கோவைக்கு விஜய் காரில் புறப்பட்டார். அப்போதும் விஜய் காரை தொண்டர்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.
விஜய் கார் 140 கிமீ வேகம் வரை சென்ற போதிலும், அவரை ரசிகர்கள் பின் தொடர்ந்தனர். 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் விஜய் காரை பாலோ செய்தபடியே சென்றனர். திருப்பூர் அருகே பல்லக்கவுண்டபாளையம் மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
அடுத்தடுத்து கீழே விழுந்து விபத்து
இதில் தவெக தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். இதற்கிடையே பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த வாகனங்களும் கீழே விழுந்து கிடந்த வாகனங்கள் மீது மோதி அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின. இவ்வாறாக 20-க்கும் மேற்பட்ட டூவீலர்கள் விழுந்து விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்தனர். பெரும்பாலானோர் தலை கவசம் அணியவில்லை.
அவ்வளவு சொல்லியும் கேட்காமல்
பெண் ஒருவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. இன்னொரு தொண்டருக்கு காதில் ரத்தம் கொட்டியது. தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு பல்வேறு நிபந்தனைகள் விதித்தும், தொண்டர்கள் விஜய் வாகனத்தை பின் தொடரக் கூடாது என்று சொல்லியும் கேட்காமல் விரட்டி சென்று படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி -
தவெகவில் அடுத்த விக்கெட் கோவை தெற்கு.. ஆப்சென்டான வேட்பாளர்.. சம்பவம் செய்த நாம் தமிழர் -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
விஜய்யின் பவுன்சர் கையில் இருக்கும் ‘சூட்கேஸ்’.. என்ன அது? இதுதான் விஷயம்! -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
தேர்தல் களத்தை விடுங்க.. சந்தையிலும் சூடுபறக்கும் விசில்.. விஜய் எண்ட்ரியால் திணறும் உற்பத்தியாளர்கள் -
விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு! -
அனுபவம் இல்லாதவரிடம் நாட்டை கொடுக்காதீங்க.. பெரம்பூருக்கே போய் விஜய்யை அட்டாக் செய்த திவ்யா சத்யராஜ் -
மீண்டும் மீண்டுமா.. பிரசார வேனில் தொங்கிய தவெக தொண்டர்.. பவுன்சர் செய்த காரியம் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
கோவையில் கேபிள் டிவியில் ஓடிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம்.. உரிமையாளரை கைது செய்த போலீஸ் -
விஜய் என்கிட்ட கேட்ட கேள்வி.. நான் எதிர்பார்க்கல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! ஓபனாக பேசிய ராதாரவி












Click it and Unblock the Notifications