பாஸ்வேர்டு எங்க? ஃபோட்டோகிராஃபர் ஆக்கிட்டீங்களே.. சிரிப்பலையில் மூழ்கிய உதயநிதி பிரச்சாரம்
காங்கேயம்: பிரச்சாரத்தின் போது, செல்பி எடுக்கச் சொன்ன இளைஞர்களை கலாய்த்து உதயநிதி ஸ்டாலின் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

இன்னும் கூட்டணியே முடிவாகாத நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரத்தை முழு ஆளாய் தொடங்கி முழு வீச்சில் சுழன்று வருகிறது திமுக.
ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, உதயநிதியின் ஒவ்வொரு விசிட்டும் திமுகவின் இதர தலைவர்களின் கண்களே விரியும் அளவுக்கு வரவேற்பு தடபுடலாக உள்ளது.

தடபுடல் வரவேற்பு
சமீபத்தில், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில், 100 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட மாலையை கிரேன் மூலம் உதயநிதிக்கு போட்டு 'பாகுபலி' வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதுவும் ஒரு குட்டி ஸ்டோரி
இந்நிலையில், காங்கேயத்தில் இன்று உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தனது பிரச்சார வாகனத்தில் பேசிக் கொண்டே வந்த பொழுது, அங்கு கூடிய இளைஞர்கள் அவரிடம் செல்பி எடுக்க வேண்டி தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.

என்னய ரொம்ப படுத்துறீங்க டா!
சரி.. மொபைல் கொடுங்க என்று உதயநிதி கேட்க, பலரும் தங்கள் மொபைலை அவரிடம் கொடுக்க முற்பட, கூட்டத்தில் ஒருவர் உதயநிதியை நோக்கி அவரது போனையே வீசிவிட்டார். எப்படியோ அதை தவறவிடாமல் பிடித்துவிட்ட உதயநிதி, போட்டோ எடுக்க மொபைலை ஆன் செய்தால், அது பாஸ்வேர்ட் கேட்க மனிதர் கடுப்பாகிவிட்டார்.

எப்படி போட்டோ எடுக்குறது?
அந்த நபரை பார்த்து, 'பாஸ்வேர்டு எங்க?' என்று சிரித்துக் கொண்டே கேட்ட உதயநிதி, அவரை அடிப்பது போல், 'இந்தா வச்சிக்க.. போனை தூக்கிப் போட்டுட்ட.. பாஸ்வேர்ட் இல்லாம நா எப்படி போட்டோ எடுக்குறது' என்று கிண்டல் செய்தார்.

போட்டோகிராஃபர் ஆக்கிட்டீங்க
பிறகு மற்றொரு நபரிடம் இருந்து மொபைல் வாங்கி, வெவ்வேறு ஆங்கிளில் செல்பி எடுத்த உதயநிதி, 'உங்கள்ட்ட பேசலாம்-னு வந்தா, கடைசியில என்ன ஃபோட்டோகிராஃபர் ஆக்கிட்டீங்களே!" என்று பன்ச் அடிக்க, கூட்டம் சிரிப்பலையில் மூழ்கியது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications