உடுமலைப்பேட்டையில் விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்! இரவோடு இரவாக பரபரப்பு! குடும்பத்தினர் புகார்
திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே புலிப் பல் வைத்திருந்ததாக மாரிமுத்து என்பவரை வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாரிமுத்தின் மகள் புகார் அளித்த நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் தான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற இளைஞர் போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே மீண்டும் அப்படியொரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. உடுமலையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

என்ன நடந்தது!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மேல்குருமலை மலைவாழ் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி மாரிமுத்து. 58 வயதான மாரிமுத்து உட்பட அந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது கடந்த சில ஆண்டுகளுக்குக் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அந்த வழக்கில் மாரிமுத்து மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. இதனால் கடந்த ஜூலை 29ம் தேதி நீதிமன்றம் மாரிமுத்தை விடுதலை செய்தது.
இதையடுத்து கேரள மாநிலம் மூணாறு அருகே வசித்து வரும் மனைவி மற்றும் குழந்தைகளை மாரிமுத்து பார்க்கப் போய் இருக்கிறார். அப்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலை வந்து வாங்கிக் கொண்டு, நீதிமன்ற ஆவணத்தில் கையெழுத்திடும்படி வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதையடுத்து அவர் கேரள அரசுப் பேருந்தில் உடுமலைக்கு வந்துள்ளார். நீதிமன்ற ஆவணங்களில் கையெழுத்திட்ட அவர், மீண்டும் மூணாற்றுக்குப் பேருந்தில் சென்றுள்ளார்.
மர்ம மரணம்
அப்போது சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறையினர் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. மாரிமுத்தைக் கீழே இறக்கிய அதிகாரிகள், புலிப் பல் வைத்திருந்ததாக அவரை கைது செய்துள்ளனர். பிறகு விசாரணை என்று உடுமலைக்கு அழைத்து வந்து வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரித்ததாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், மாரிமுத்தைக் கைது செய்தது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் எதுவும் சொல்லப்படவில்லையாம்.
இந்தச் சூழலில் கடந்த ஜூலை 29ம் தேதி இரவு மாரிமுத்து கழிவறைக்குச் சென்றதாகவும் இருப்பினும் நீண்டநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை என்றும் வனத்துறையினர் கூறுகிறார்கள். இதனால் வனத்துறை அதிகாரிகள் உள்ளே சென்று பார்த்ததாகவும் மாரிமுத்து தனது வேஷ்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
குடும்பத்தினர் குற்றச்சாட்டு
இருப்பினும், வனத்துறை அதிகாரிகளின் இந்த கருத்துகளை மாரிமுத்து குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மாரிமுத்தை 29ம் தேதி இரவு முழுக்க வனத்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும் அதிலேயே அவர் உயிரிழந்ததாக மாரிமுத்து குடும்பத்தினர் கூறுகிறார்கள். இதை மூடிமறைக்கவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள் என்றும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விசாரணை
மாரிமுத்து மரணம் குறித்த தகவல் கிடைத்தவுடன் உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாரிமுத்து உடலைக் கைப்பற்றிய அதிகாரிகள், அந்த அறைக்கும் சீல் வைத்தனர். இதற்கிடையே மாரிமுத்தின் மகள் சிந்து உடுமலை காவல் ஆய்வாளரிடம் நேற்று இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார். அதில் தனது தந்தையின் மரணத்திற்குக் காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு குற்றவியல் நீதித்துறை நடுவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications