Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாராபுரத்தில் யாரிந்த 19 வயது இளம் பெண்.. திருப்பூரில் ஜன்னல் வழியே ரூமுக்குள் நடந்ததை பார்த்த கணவர்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையம் கங்கா நகர் பகுதியை உலுக்கியுள்ள ஒரு சோகமான சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. நாளுக்கு நாள் இளம் பெண்களின் மரணம் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறி வரும் நிலையில், இந்த தாராபுரம் சம்பவமும் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. என்ன நடந்தது திருப்பூரில்?

பனியன் நிறுவனம் நடத்தி வரும் விகாஸ் கண்ணனுக்கும், கன்னாங்காடு பகுதியைச் சேர்ந்த ஷோபியா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 1-ந்தேதி மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Tiruppur Dharapuram newbride college student

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நிலையில், விகாஸ் கண்ணன் குடும்பத்தினர் முழு செலவையும் ஏற்று, நகை அணிவித்து ஷோபியாவை மணமுடித்தனர். திருமணத்தின்போது ஷோபியா தொடர்ந்து கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்ற நிபந்தனையுடன், விகாஸ் கண்ணன் குடும்பத்தினர் அதற்கு சம்மதம் தெரிவித்தே இந்த திருமணத்தை நடத்தினர்.

திருப்பூர் தாராபுரம் மாணவி

திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஷோபியா, திருமணத்திற்கு பிறகும் தனது படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார்..

ஆனால், திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் காரணமாக தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பினால், ஷோபியா கடந்த 15 நாட்களாக தனது அம்மா வீட்டில் வசித்து வந்தார். பிறகு பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, கணவன் வீட்டிற்கு சென்ற ஷோபியாவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை மெடிக்கல் செக்கப் செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக, கணவர் விகாஸ் கண்ணன், "இனி குழந்தைக்காக நீ கல்லூரிக்கு செல்ல வேண்டாம், படிப்பை நிறுத்திவிடு" என கட்டளையிட்டதாக தெரிகிறது..

சொந்தக்காலில் நிற்க முடிவு

ஆனால் இதற்கு ஷோபியா மறுப்பு தெரிவித்துள்ளார்.. தான் படித்து சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற கனவோடு இருந்த ஷோபியா, கணவனின் இந்த பேச்சை ஏற்க மறுத்து, நேற்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்றாராம்..

மாலை 4.30 மணி அளவில் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய ஷோபியாவிடம், கணவர் விகாஸ் கண்ணன் மீண்டும் படிப்பு தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். "இனி நான் தொடர்ந்து படித்து தான் ஆவேன்" என ஷோபியா உறுதியாக கூறியதாக தெரிகிறது. அத்துடன் கோபமடைந்த ஷோபியா தனது ரூமுக்கு சென்று உள்ளே பூட்டிக்கொண்டார்.

ஷோபியா - திருப்பூர் அரசு மருத்துவமனை

நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த விகாஸ் கண்ணன் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ஷோபியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவர், உடனடியாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், இளம் பெண்ணின் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, திருப்பூர் அரசு மருத்துவமனையில் குவிந்த ஷோபியாவின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள், கணவர் வீட்டார் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினர்.

கணவர் விகாஸ் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரவில்லை எனவும், அவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழப்பத்தில் போலீஸ்

போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருவதாகவும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

கல்வியா? குழந்தையா? என்ற குடும்பப் பிரச்சினையில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+