திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசி வாய்ப்பு! 2024ல் பாஜக வென்றால்.. இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது! சொல்கிறார் திருமாவளவன்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

இந்தியன் கம்மயூனிஸ்ட் கட்சியின் 25ஆவது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு மிகச் சிறப்பாக நேற்றைய தினம் நடைபெற்றது.

திருப்பூரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்காதது ஏன் தெரியுமா..? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்காதது ஏன் தெரியுமா..? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்!

 ஸ்டாலின்

ஸ்டாலின்

சமூக நல்லிணக்கம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவை நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றார். மேலும், அனைத்து மொழிகளையும் ஒரே போலப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றாகப் பார்க்க வேண்டும் எனக் கூறுவதால் தேச விரோதிகள் என்கிறார்கள் என அழைக்கின்றனர் என்றும் நாட்டில் ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டு வரத் துடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்..

 தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

அதேபோல இந்நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், :"தமிழ்நாட்டில் மிகவும் வலுவான ஒரு கூட்டணி அமைந்துள்ளது. இதேபோன்ற வலுவான ஒரு கூட்டணியைத் தமிழகம் தாண்டி மற்ற மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாம் தேசிய பார்வையோடு தான் அணுக வேண்டும்.

 அடுத்த இலக்கு தமிழ்நாடு

அடுத்த இலக்கு தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் கட்சிகள் நாட்டில் இருக்கும் எல்லா ஜனநாயக கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே பணிகளைத் தொடங்க வேண்டும். இனியும் தவறினோம் என்றால் மீண்டும் சங்பரிவாரம் அதிகாரத்தைப் பிடிக்கக் கூடும். இந்த சங்பரிவார் இயக்கங்கள் தங்கள் அடுத்த இலக்காகத் தமிழ்நாட்டைக் கையில் எடுத்து உள்ளனர்.

Recommended Video

    Modi மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து - Thirumavalavan *Politics
    இடதுசாரிகள்

    இடதுசாரிகள்

    அவர்கள் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். அவர்கள் இப்போது கேரளா மற்றும் தமிழ்நாடு மீது குறி வைத்துச் செயல்படுகின்றனர். தேசிய அளவில் பல்வேறு அளவுகோல்களில் இந்த மாநிலங்கள் தான் முன்மாதிரியாக உள்ளனர். அதைச் சீர்குலைக்க விரும்புகின்றனர். இந்த இரு மாநிலங்களும் இந்த நிலையை எட்டியதற்குத் தமிழகத்தின் பங்கும் முக்கியமானது. எனவே, தான் நாட்டின் எந்தவொரு மூலையிலும் இடதுசார சிந்தனை இருக்கக் கூடாது என்று பாஜக முயல்கிறது.

    English summary
    Thol Thirumavalavan says all parties should came to oppose BJP: (திருப்பூரில் தொல். திருமாவளவன் பாஜகவுக்கு எதிராகப் பேச்சு) Thol Thirumavalavan latest press meet in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X