விஜய் மாட்டு வண்டியில் பயணித்தார் சரி.. ஆனால் அந்த மாட்டை இழுத்து போனது யாருனு பார்த்தீங்களா!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் விஜய் வாக்கு சேகரிக்கும் வகையில் ரோடு ஷோவின் போது மாட்டு வண்டியில் சில தூரம் பயணித்தார். முதல்வர் விஜய் விமானத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து, பின் பிரச்சார வாகனத்தில் ஏறி வந்த விஜய், திடீரென மாட்டு வண்டியிலும் ஏறினார். அப்போது ஒரு மாடு மட்டும் ஒரு பக்கமாக இழுத்து கொண்டு சென்ற போது, அதனை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கயிற்றை பிடித்து இழுத்து வந்தது கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துவிட்டது. கடைசி நாளான இன்று முதல்வர் விஜய் தாராபுரம் தொகுதியில் ரோடு ஷோவில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். தாராபுரம் தொகுதியில் மட்டும் 30 இடங்களில் ரோடு ஷோவில் ஈடுபட்டது தவெகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

MR Vijayabhaskar

சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வந்த முதல்வர் விஜய், அங்கிருந்து தாராபுரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய விஜய், காரில் வந்து பின்னர் பிரச்சார வாகனத்திற்கு மாறினார். ரோடு ஷோ தொடங்கிய பின் விஜய் திடீரென மாட்டு வண்டியில் சில தூரம் பயணித்தார். இது தவெகவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்த வீடியோ தவெகவினர் மத்தியில் டிரெண்டாகியது. இதனிடையே அந்த வீடியோ திமுக மற்றும் அதிமுக கட்சியினர் மத்தியில் புதிய விவாதமாகி இருக்கிறது. அந்த வீடியோவில் விஜய் மாட்டு வண்டியில் ஏறி நிற்க, இரு மாடுகளில் ஒரு மாடு ஒரு பக்கமாக இழுத்து கொண்டே வேறு திசைக்கு சென்றது. இதனால் மாட்டின் மூக்கு கயிறு பிடித்து ஒருவர் கட்டுப்படுத்தி கொண்டே வந்தார்.

திடீரென வீடியோவில் அந்த நபர் யார் என்பது தெரிய வந்தது. அவர் தெரிந்த முகமாக இருந்த நிலையில், கொஞ்சம் ஜூம் செய்து பார்த்த போது, மாட்டை இழுத்து கொண்டு வந்த நபர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான் என்பது தெரிய வந்தது. தவெகவில் தொடக்கம் முதலே பயணித்து வரும் அமைச்சர்கள் கூட செய்ய தயங்கும் விஷயத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்திருப்பதாக பார்க்கபப்டுகிறது.

ஜெயலலிதாவின் கார் புறப்படும் போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அத்தனை அமைச்சர்களும் கும்பிட்டு நிற்பார்கள். அதேபோல் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விஜய்க்கு மரியாதை கொடுப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சருக்கே இந்த நிலைமையா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+