விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.. நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு.. திருப்பூரில் விஜய் வாக்குறுதிகள்
திருப்பூர்: திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் தவெக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும் விவசாயக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், பழைய ஓய்வூதிய திட்டத்தினை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.
தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தவெக நிர்வாகிகள் மத்தியில் பேசிய விஜய், தவெக தேர்தல் வாகுறுதிகளை அளித்தார். விஜய் அளித்த வாக்குறுதிகளை இங்கு காணலாம்.

தவெக தேர்தல் அறிக்கை எப்போது?
உழவர்களின் தோழன் திட்டத்தின்படி, குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நேரடி முதலீட்டு ஆதரவு தொகையாக வழங்கப்படும். 100 சதவீதம் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின்படி பயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
வரும் 16 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன். அதற்கு முன்பாக சில திட்டங்களை இங்கே அறிவிக்கிறேன். நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்வதற்காக அரசுக்கு சொந்தமான ஒரு உலகாளவிய இ கார்மஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம்
மேலும் முக்கிய நகரங்களில் விசைத்தறி விற்பனை நிலையங்கள் ஷோரூம் அமைக்கப்படும். நிலையற்ற நூல் விலை மின்சார நெருக்கடியை பகிர்ந்து கொள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு நெசவாளார் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வங்கி மூலம் டிவிகே அரசு நேரடியாக வழங்கும்
கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட்களாகவும் விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1500 யூனிட்களாகவும் உயர்த்தப்படும். நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைக்க அவர்கள் வழங்கும் நூல், சாயங்கள் ஆகிய ரசாயனங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி
* அனைத்து நெசவாளர்களுக்கும் 10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
* நெசாவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்
* விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், காவலர்களின் அடிப்படை ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யபடும்..
* வேளான் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
* 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்
* அரசு ஊழியர்களின் நலனுக்காக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
* 5 அல்லது அதற்கு மேற்பட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு பணியை நிறைவு செய்துள்ள அனைத்து தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள், எழுத்தர் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம்.
* பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.
* அனைத்து அரசு ஊழியர்களின் இடமாறூதல்களும் வெளிப்படத்தன்மையோடு, கால வரையறைக்கு உட்பட்ட முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
* காவலர்களின் அடிப்படையில் மாத ஊதியத்தை 18,200-ல் இருந்து 25 ஆயிரமாக உயர்த்துவோம். என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications