பைக் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து.. உயிரிழந்த இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
திருப்பூர்: பல்லடம் தாராபுரம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற பைக் எதிரே வந்த தண்ணீர் லாரி மீது மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் இன்று காலை தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி அதிவேகமாக சென்ற மோட்டார் பைக் விவேகானந்தா பள்ளி அருகே வளைவில் திரும்பியபோது எதிரே வந்த தண்ணீர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த வாலிபர் அப்பகுதியினரால் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவரது உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அந்த வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திருச்சி வெங்கூரைச் சேர்ந்த சேது என்பவரது மகன் பூபதி (23 ) என்பது தெரியவந்துது. பூபதி தனது சொந்த ஊரான திருச்சியில் இருந்து பல்லடம் வழியே கோவை நோக்கிச் சென்ற பொழுது அதிவேகமாக சென்றுள்ளார்.
அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து திரும்பிய தண்ணீர் லாரி மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications