திருப்பூர் நிர்மலாவிற்கு இன்னும் 2 நாளில் திருமணம்... அதற்குள் இப்படியா ஆகணும்.. திரண்ட மக்கள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செங்கப்பள்ளி சென்னிமலை பாளையத்தை சேர்ந்த நிர்மலா என்பவருக்கு இன்னும் இரண்டு நாளில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.. திருமணத்திற்கு தயாராகி வந்த நிர்மலா, தனது தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் கடந்த ஐந்து நாள் முன்பு சென்றார். அவருக்கு நடந்த சம்பவம் மொத்த ஊரையும் அதிர வைத்துள்ளது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ஊர் மக்கள் ஒற்றுப்பட்டு போலீசுக்கு எதிராக மறியல் போராட்டமும் நடத்தினார்கள்..
பொதுவாக திருமணம் நிச்சயக்கப்பட்டவர்கள் வெளியில் செல்ல உறவினர்கள், பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை. அதிலும் வாகன பயணங்கள் என்பது சில நேரங்களில் நினைத்து பார்க்க முடியாத சங்கடங்களையும் சோகத்தையும் ஏற்படுத்தி விடுகிறது..இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்கிற நிலையில், புதுமாப்பிள்ளைகள் விபத்தில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளது.

இதேபோல் திருமணம் ஆன புதிதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நம்மூர்களில் நடக்கின்றன. விபத்துகளுக்கு பல காரணங்கள் உள்ளது என்றாலும், திருமண நேரத்தில் நடைபெறுவது இரு வீட்டாரையும் பெரும் மன கஷ்டங்களுக்கு ஆளாக்கிவிடுகிறது.. சில நேரங்களில் யார் என்றே தெரியாத அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியும் புதிய திருமண ஜோடிகள் பாதிக்கப்படுகிறார்கள்.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செங்கப்பள்ளி சென்னிமலை பாளையத்தை சேர்ந்த 23 வயதாகும் நிர்மலா என்பவருக்கு மார்ச் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.அதாவது இன்னும் இரண்டு நாளில் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி மாலையில் இளம் பெண் நிர்மலா தனது இருசக்கர வாகனத்தில், தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த நிர்மலா, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் நிர்மலா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்து 4 நாட்களுக்கு மேலாகியும் விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஊத்துக்குளியில் புதன்கிழமை அன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலின் பேரில் ஊத்துக்குளி போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தினர்.இந்த சம்பவத்தால் ஊத்துக்குளியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications