"தேவி"யின் விளையாட்டு.. 5வது கல்யாணத்துக்கு ரெடியாகி.. சுப்ரமணிக்கு காலில் "அந்த" ஊசியை போட்டாராம்
4 திருமணம் செய்த பெண்ணை திருப்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்
திருப்பூர்: பொங்கல் பண்டிகை அன்று, கணவருக்கு வலது காலில் ஊசி போட்டுள்ளார் மனைவி தேவி.. இதுகுறித்த விவரங்களை திருப்பூர் போலீசார் புட்டு புட்டு வைக்கிறார்கள்.
அவிநாசி அருகே குன்னத்தூர் தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி.. 47 வயதாகிறது.. இவர் ஒரு விவசாயி... இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவருக்கு நீண்டகாலமாக திருமணமாகாமல் இருந்து வந்தது.
அதனால், புரோக்கர் மூலம் பெண் தேடி வந்தார்.. 2 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி என்ற பெண் குறித்து புரோக்கர் மூலம் தெரியவந்தது.. தேவிக்கு 35 வயதாகிறது.. இவரையே திருமணமும் செய்தார்.

மாமியார்
இந்நிலையில், மாமியாருடன் தேவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.. இதனால், மாமியார் கோபித்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடைய மகள் வீட்டிற்கே சென்றுவிட்டார்... இந்த நேரத்தில் சொத்து குறித்து பேச்செடுத்தார் தேவி.. இங்கிருக்கும் சொத்தை விற்றுவிட்டு திண்டுக்கல்லில் போய் வாழலாம் என்று சுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளார்... இதை கேட்டு அதிர்ந்த சுப்ரமணி, பூர்வீக சொத்தை விற்க வேண்டாம் என்று மறுத்துள்ளார்.. இந்நிலையில் கடந்த மாதம் 15ம் தேதி பொங்கல் பண்டிகை தினத்தில் சுப்பிரமணிக்கு திடீரென காய்ச்சல் வந்துவிட்டது.. அப்போது தேவி அவருக்கு ஊசி போட்டுள்ளார்..

டவுட் ஆரம்பம்
இதில் சுயநினைவை இழந்து சுப்பிரமணி விழுந்துவிட்டார்.. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.. அப்போது டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, உடம்பில் விஷம் கலந்திருப்பதாக சொன்னார்கள்.. அப்போதுதான் தேவியை காணோம்.. கணவர் உயிருக்கு போராடும்போது, தேவி எங்கே போயிருப்பார் என்று பலருக்கும் சந்தேகம் கிளம்பியது.. தன்னுடைய மனைவியை காணவில்லை என்று குன்னத்தூர் போலீசாரிடம் சுப்பிரமணியமும் புகார் அளித்தார்... அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேவியை தேடி வந்தனர்.

தேவியின் திருவிளையாடல்
அப்போதுதான் "தேவியின் திருவிளையாடல்" அம்பலமானது.. தேவி ஏற்கனவே 2 திருமணம் ஆனவர்.. சுப்ரமணி 3வதாக வாக்கப்பட்டவர்.. காய்ச்சலில் வாழ்வா? சாவா? என்று சுப்ரமணி போராடி கொண்டிருந்தபோது, 4வதாக, மாதம் 27ம் தேதி ரவி என்பவரை தேவி திருமணம் செய்துள்ளார்.. நாமக்கலில் பெரிய தொழிலதிபராம் இந்த ரவி.. இந்த தகவல் கிடைத்ததுமே, நாமக்கல் பகுதியில் தங்கியிருந்த தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்... அப்போது தேவி தன்னுடைய பற்றின முழு விவரங்களையும் போலீசில் சொன்னார்.. ஆடம்பர வாழ்க்கை என்றால் தேவிக்கு பிரியமாம்.. இதற்காகவே தொழிலதிபர்களை குறி வைத்து வந்தாராம்..

தலைமறைவு
கல்யாணம் ஆகாமல், நடுத்தர வயதை தாண்டியவர்கள் என்றால், உடனே ஓகே சொல்லிவிடுவாராம் தேவி.. தொழிலதிபர்கள், வசதியுடைய ஆண்களை மட்டுமே மயக்கி திருமணம் செய்து ஏமாற்றும் வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். திருமணம் முடிந்து கொஞ்ச நாள் அவர்களுடன் குடும்பம் நடத்துவாராம்.. அதற்கு பிறகு, அவர்களிடம் இருந்து பணம், சொத்துக்களை பறித்து கொண்டு தலைமறைவாகிவிட்டு, பிறகு, வேறு ஒருவருடன் திருமண வாழ்க்கையை தொடர்வாராம்.

1, 2, 3, 4
சுப்பிரமணியுடன் வாழ்ந்து வந்தபோதுதான், 4வது கல்யாணத்துக்கு ஆள் தேடி வந்தார் தேவி. அப்போதுதான், மனைவியை விவாகரத்து செய்த நாமக்கல் தொழிலதிபர் ரவி என்பவர், திருமணத்துக்கு பெண் பார்த்து வருவதை கேள்விப்பட்டார்.. சுப்பிரமணியைவிட, ரவிக்கு நிறைய சொத்து இருப்பதையும் அறிந்தார்.. ஆனால், அவரை திருமணம் செய்ய சுப்பிரமணி தடையாக இருப்பார் என்று, பொங்கல் பண்டிகைக்கு அந்த பிளானை போட்டார்.. விஷ ஊசி எடுத்து, சுப்பிரமணியனுக்கு செலுத்தியிருக்கிறார்.. இவ்வளவும் விசாரணையில் உறுதியானதையடுத்து, தேவியை குன்னத்தூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மாமியார்
தேவிக்கு தாய், தகப்பன் இல்லை.. முத்துக்குமார் என்பவரை முதல் திருமணம் செய்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால், அவரிடம் இருந்து பிரிந்து, இன்னொருவரை திருமணம் செய்துள்ளார்.. அவரைவிட்டு பிரிந்து சுப்பிரமணியை 3-வது திருமணம் செய்துள்ளார். சுப்பிரமணியிடம் சொத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் தராத ஆத்திரத்தால், சர்க்கரை வியாதி இருந்த சுப்பிரமணிக்கு, ஊசி வழியாக களைக்கொல்லியை உடலில் செலுத்தி கொல்ல முயற்சித்தாராம்.. 4 கல்யாணம் செய்த தேவி, இப்போது "மாமியார்" வீட்டில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications