"பச்சை"குயின்.. பாய் பிரண்டுகளுடன் ஒன்றாக தங்கிய பெண்..வேலையை காட்டிய இளைஞர்களும், சூட்கேஸ் கொலையும்
சடலமாக சூட்கேஸில் கிடந்த பெண்ணின் அடையாளங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர்
திருப்பூர்: அசாம் மாநில பெண் திருப்பூரில் கொலை செய்யப்பட்டதையடுத்து, அது குறித்த விசாரணை தொடர்ந்து 3வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது.. இந்த வழக்கில் புது புது தகவல்கள் போலீசார் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
3 நாட்களுக்கு முன்பு, தாராபுரம் சாலை பொல்லிக்காளி பாளையம் அருகே சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது.
இதனால் அந்த பகுதி மக்கள் அங்கே சென்று பார்த்தபோது ஒரு சூட்கேஸ் கிடந்திருக்கிறது . .. அந்த சூட்கேஸில் இருந்து அதிகமான துர்நாற்றம் வரவும், உடனடியாக போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்..

சூட்கேஸ்
போலீசாரும் விரைந்து வந்து அந்த சூட்கேசை எடுத்து திறந்து பார்த்தனர்.. அதில், 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. அந்த சடலத்தின் அடையாளங்களை பார்த்தபோது, அவர் பார்ப்பதற்கு வடமாநில பெண் போல இருந்தார்.. வலது கை, தலையின் பின்புறம் காயங்கள் இருந்தன.. கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. நெற்றியில் பொட்டு இருந்தது.. கையில் வளையல், காதில் கம்மலும் இருந்தது.. இன்னொரு கையில் குயின் என்ற ஆங்கில எழுத்துக்களால் பச்சை குத்தப்பட்டிருந்தது.

போஸ்ட்மார்ட்டம்
இதையடுத்து, அந்த பெண் யார்? எதற்காக யார் கொன்றார்கள் என்ற விசாரணையில் போலீசார் இறங்கினர்.. முதலில் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. துணை கமிஷனர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது.. சூட்கேஸ் கிடந்த பகுதியின் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன... அதில் கடந்த 6-ம் தேதி இரவு 10.30 மணிக்கு தாராபுரம் ரோட்டில் பைக்கில் 2 பேர் சந்தேகப்படும் விதமாக சென்றுள்ளனர்..

கால்வாய்
அப்போது அவர்கள் சூட்கேஸ் பெட்டியை கால்வாயில் வீசி மறுபடியும் அதே சாலையில் பைக்கில் செல்வது பதிவாகி இருந்தது. இதனால் அந்த 2 பேர் யார் என்பது குறித்த விசாரணை ஆரம்பமானது.. மற்றொரு பக்கம், உயிரிழந்த பெண் யார் என்பது குறித்த விசாரணை துரிதமானது. இப்போது அந்த பெண்ணின் தகவல்களை ஓரளவு திரட்டி விட்டனர் போலீசார்.. உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் நேகா.. அசாம் மாநிலத்தை சேர்ந்தவராம்..

ஆண் நண்பர்கள்
திருப்பூரில் ஒரு கம்பெனில் வேலை கிடைத்துள்ளது.. அதனால், திருப்பூர் பின்கோடு கேஎம்சி பகுதியிலேயே ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.. அவருடன் 2 ஆண்களும் சேர்ந்து தங்கி உள்ளனர்.. அவர்களும் வெளிமாநிலம் போலிருக்கிறது.. பெயர் அபிதாஸ் மறுறும் ஜெய்லால் என்பதும் தெரிய வந்திருக்கிறது.. இவர்கள் 3 பேருமே ஒரே கம்பெனியில்தான் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள்.. இப்போது அந்த பெண்ணின் வீட்டை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டுள்னர்..

வடமாநிலம்
இந்த வீட்டுக்கு வந்து ஒருமாதம்தான் ஆகிறதாம்.. கடந்த 6ம் தேதி திடீரென வீட்டை காலி செய்வதாக சொல்லிவிட்டு, பொருட்களை எடுத்து சென்றார்களாம்.. அப்போதுதான், அந்த பொருட்களுடன் சம்பந்தப்பட்ட சூட்கேசும் சென்றுள்ளது.. இப்போது அந்த 2 பேரையும் காணோம்.. வடமாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகமிருப்பதால், போலீசார் அவர்களை தேடி அங்கு சென்றிருக்கிறார்கள்.. எப்படியும் பிடித்து விடுவார்கள் என்று தெரிகிறது.. அவர்களை பிடித்தால்தான் இந்த கொலைக்கான உண்மைக் காரணங்கள் வெளிவரும்..!












Click it and Unblock the Notifications