திருப்பூரில் பலரது வங்கி கணக்கில் பணம் திடீரென மாயம்.. முற்றுகையிட்ட மக்களுக்கு பெரிய ட்விஸ்ட்
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருந்தது.. ஒரே நேரத்தில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் ஆடிப்போன பொதுமக்கள் நேற்று வங்கிக்கு சென்று தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வங்கி நிர்வாகம் அளித்த விளக்கம் தான் மிக முக்கியமானது.
திருப்பூர்-தாராபுரம் சாலையில் கரட்டாங்காடு பகுதியில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் வங்கி கணக்கு தொடங்கினார்கள். அத்துடன் தாங்கள் சேமித்த பணத்தை அந்த வங்கி கணக்கில் அதில் பணம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 30-க்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகளில் இருந்து ஒரே நேரத்தில் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் ஆடிப்போன பொதுமக்கள் நேற்று வங்கிக்கு சென்று தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் மைனஸ் காட்டுவதாக குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து வங்கியில் முறையான பதில் இல்லாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு வங்கி அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படட்து.
இந்தவிவகாரம் தொடர்பாக எஸ்ஐபி வங்கி மேலாளர் கூறுகையில், பொதுத்துறை வங்கி என்பதால் தவறுதலாகவோ, முறைகேடாகவோ இங்கு பணம் எடுக்க வாய்ப்பே இல்லை. கொரோனா காலகட்டத்திலோ அல்லது அதற்கு பின் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் ஆட்டோ கிரெடிட் அடிப்படையில் கடன் பெற்றவர்கள் சில தவணைகள் மற்றும் அபராதம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். அதன் பிறகு வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாமல் இருந்திருந்தால் தற்போது அதை பிடித்தம் செய்திருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் நகைக்கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கு ஆட்டோ கிரெடிட் அப்டேட் செய்திருப்பார்கள்..
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வங்கி வாடிக்கையாளர்களிடம் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் எதற்காக பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தவணை முறையில் பொருள் வாங்காமல் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்கில் பணம் பிடித்தம் செய்யப்பட்டது தெரிந்தால் அவர்களிடம் கடிதம் பெற்று தலைமை கிளைக்கு அனுப்பபி வைப்போம். பணம் பிடித்தம் செய்யப்பட்டவர்கள் வங்கி கணக்கு ஆய்வு செய்து பணம் பிடித்தம் செய்ததற்கான காரணம் நிச்சயம் தெரிவிப்போம் என்று மேலாளர் விளக்கம் அளித்தார்.இதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications