மிக்சியை கொண்டு போய் விற்று.. சரக்கும் மட்டனும் வாங்கிய கணவர்.. கட்டையால் அடித்தே கொன்ற மனைவி!
கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்
திருப்பூர்: "வீட்டில் இருந்த மிக்சியை எடுத்துட்டுபோய், கடையில வித்து.. சரக்கு பாட்டிலும், மட்டனும் வாங்கினார்.. அந்த ஆத்திரத்தில்தான் புருஷனை மரக்கட்டையால் அடித்து கொன்னுட்டேன்" என்று மனைவி வாக்குமூலம் தந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியை சேர்ந்த தம்பதி வெங்கடேசன் - உமாதேவி. உமாதேவிக்கு 47 வயதாகிறது. இவர்களுக்கு 21 வயதில் நிவேதன் என்ற மகன் உள்ளார்.

தம்பதி இருவரும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாசத்துக்கு முன்பு வீட்டின் மாடிப்படியில் இருந்து வெங்கடேசன் தவறி கீழே விழுந்துவிட்டார்.
அதனால் காலில் கட்டு போட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்... வேலைக்கும் போகவில்லை.. வீட்டில் ரெஸ்ட் எடுக்கும் சமயத்தில், குடிப்பழக்கத்துக்கும் வெங்கடேசன் ஆளாகிவிட்டார். ஏற்கனவே வேலைக்கு போகாததால், வருமானம் இல்லாமல் குடும்பம்தவித்து வந்தது.. இதனால் குடிப்பழக்கத்தை ருசி கண்ட வெங்கசேடன், வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வித்து குடிக்க ஆரம்பித்தார்.
கடந்த 17-ந் தேதி, பைக்கில் இருந்து கணவர் கீழேவிழுந்துவிட்டார் என கூறி திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உமாதேவி அழைத்து சென்றார். முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள், உடனே கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகுமாறு சொன்னார்கள். வாகன விபத்து என்பதால் இது சம்பந்தமான போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது. இதனிடையே சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்து விடவும் அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடந்தது.
இந்த சமயத்தில்தான், வெங்கடேசனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. அதில், வெங்கடேசன் பைக்கில் இருந்து கீழே விழுந்து இறக்கவில்லை, தலையில் யாரோ தாக்கி கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மங்கலம் போலீசார், உமாதேவியிடம் விசாரித்தனர். ஆனால், அவர் எதைஎதையோ உளற ஆரம்பித்தார். இதன்பிறகுதான் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை சொன்னார். அந்த வாக்குமூலம் இதுதான்:
"நான் 17-ந் தேதி வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தேன்... மது பாட்டிலும் மட்டனும் வாங்கி என் கணவர் வைத்திருந்தார். இதுக்கு ஏது பணம் என்று கேட்டேன்.. வீட்டில் இருந்த மிக்சியை வித்துதான் இதை வாங்கினேன்னு சொனன்ர். அதனால் எங்களுக்குள் சண்டை வந்தது.. என்னை அடிக்க வந்தார்.
நான் கோபத்தில் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து அவரை அடிச்சிட்டேன்.. கீழே மயங்கி விழுந்து இறந்துட்டாரு.. வெளியே தெரிந்தா சிக்கல் ஆயிடும் என்று நினைத்துதான், பைக்கில் இருந்து கீழே விழுந்தார் என்று சொல்லி, ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை செய்ய தூக்கி சென்று நாடகம் ஆடினேன்" என்றார். இப்போது உமாதேவி கோவை ஜெயிலில் உள்ளார்!
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications