நிர்வாண வீடியோவை நான்தான் கேட்டேன்.. என்னை தவிர்த்தார்.. பேஸ்புக்கில் போட்டேன்.. அதிர வைத்த இளைஞர்

காதலியின் நிர்வாண வீடியோவை பதிவிட்ட இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நிர்வாண வீடியோவை நான்தான் கேட்டேன்.. என்னை தவிர்த்தார்.. பேஸ்புக்கில் போட்டேன்.. அதிர வைத்த இளைஞர்

    திருப்பூர்: "நிர்வாணமாக இருக்கும் வீடியோவையும், குளிக்கும் வீடியோவையும் நான்தான் செல்போனில் அந்த பெண்ணை எடுத்து அனுப்புமாறு சொன்னேன்" என்று கைதாகி உள்ள இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. 19 வயதாகிறது.

    இவருடைய ஊரைச்சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இந்த பெண் சூலூர் அருகே தங்கி இருந்து ஒரு காலேஜில் 2-ம் வருடம் படித்து வருகிறார். இருவருமே ஒரே ஊர் என்பதால், சொந்த ஊரில் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள்.. இந்த நட்பு காதலாக மாறியது.. பிறகு தினமும் போனில் பேச ஆரம்பித்தனர்.. வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்தும் பேசினர்.

    வீடியோ கால்

    வீடியோ கால்

    இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதால், நிர்வாண நிலையிலேயே செல்போனில் அந்த பெண் பேசியுள்ளதாக தெரிகிறது.. மேலும் கம்ப்யூட்டரில் வீடியோ கால் பேசினாலும் இப்படியே நிர்வாண நிலைதானாம். தன்னை நம்பி இந்த கோலத்தில் பேசிய பெண்ணின் வீடியோக்களை மொத்தமாக சேமித்து வைத்து கொண்டே வந்த அஜித், ஒரு கட்டத்தில், டிரஸ் இல்லாமலும், குளிக்கும் போதும் வீடியோ எடுத்து அனுப்ப சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அந்த பெண்ணும் நம்பி இந்த வீடியோக்களையும் இஷ்டத்துக்கும் எடுத்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், திடீரென 2 பேருக்கும் ஏதோ பிரச்சனை வந்துவிடவும், பெண்ணின் நிர்வாண வீடியோக்கள் மொத்தத்தையும் ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார். இதை பார்த்த பிறகு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து, இதை பற்றி அவரிடமே நேரிடையாக கேட்டார். அதற்கு அவர், வெளியே அல்லது போலீசில் சொன்னால், ஆசிட் வீசி கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். அதனால் வீட்டில் பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார் அந்த பெண்.

    பறிமுதல்

    பறிமுதல்

    இதையடுத்துதான், சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர். மேலும், அவரது செல்போன், கம்ப்யூட்டரில் இருந்த பெண்ணின் நிர்வாண வீடியோக்களையும் பறிமுதல் செய்தனர்.

    லேப்டாப்

    லேப்டாப்

    "நான் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். ஒரு வருஷத்துக்கு முன்பு, என்னுடன் ஸ்கூலில் ஒன்றாக படித்த பெண்ணை சந்தித்தேன்.. இருவரும் காதலித்தோம்... வாட்ஸ்அப் காலில் பேசி வந்தோம். அந்த பெண்ணின் சில வீடியோக்களை என் லேப்டாப்பில் சேர்த்து வைத்திருந்தேன். வேறு சில வீடியோக்களையும் எனக்கு அனுப்ப சொல்லவும் அவளும் எனக்கு அனுப்பி வைத்தாள்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    திடீரென எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது.. அவள் என்னுடன் பேசவே இல்லை.. போனையும் பிளாக் பண்ணிவிட்டாள். அதனால் நேரில் போய் பார்த்தேன்.. அப்போதும் என்னுடன் பேசவில்லை.. அதனால் ஆத்திரம் அதிகமாகி அவளை பழிவாங்க திட்டம் போட்டேன்.. அதற்கு பிறகுதான், அவளுடைய வீடியோக்களை அவளது சொந்தக்காரர்களுக்கே வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தேன்" என்று வாக்குமூலம் தந்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+