பாம்பு தோல் உரிக்குமே.. அந்த மாதிரி.. ஒவ்வொரு பனியனாக கழட்டி.. பகீரை கிளப்பிய இளைஞர்.. திருப்பூரில்!
பனியன்களை உடம்பில் சுற்றி வைத்து கடத்த முயன்ற இளைஞர் சிக்கி உள்ளார்
திருப்பூர்: உடல் முழுவதும் ஒருவர் டி-ஷர்ட்டுகளை திணித்து வைத்து.. அதை கீழே விழாதவாறு கயிற்றினால் கட்டி.. கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.. கடைசியில் அவர் கையும் களவுமாக சிக்கி... பாம்பு தோல் உரித்து போடுவதை போல.. ஒவ்வொரு டி-ஷர்ட்டாக கழட்டும் இந்த வீடியோ வைரலாகியும் வருகிறது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே உள்ள நேதாஜி அப்பரெல் பார்க்கில் ஏராளமான பனியன் கம்பெனிகள் இருக்கின்றன.
அதில், வேலை செய்யும் பெரும்பாலான நபர்கள் வட மாநிலத்தவர்கள் தான். அந்த வகையில் ஒரு கம்பெனியில் வட மாநில வாலிபர் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. வழக்கமாக இந்த கம்பெனியில் வேலையை விட்டு கிளம்பும்போது அங்கிருக்கும் செக்யூரிட்டிகள் ஊழியர்களை செக் செய்துவிட்டு அனுப்புவர்.

செக்யூரிட்டிகள்
அந்த வகையில் நேற்றும் வழக்கமாக சோதனை நடந்தது.. அப்போது ஒருவர் உடல் வீங்கி போய் வெளியே வந்தார்.. அவர் மற்ற நாட்களில் பார்ப்பதற்கு ஒல்லியான தேகத்தை உடையவர். திடீரென உடம்பெல்லாம் உப்பி போய் போய் வெளியே வரவம் அவர் மீது செக்யூரிட்டிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

டி-ஷர்ட்கள்
அதனால் அவரை ஓரங்கட்டி, அணிந்திருந்த சட்டையை கழட்ட சொன்னார்கள்.. அப்போதுதான் உள்ளுக்குள் ஏராளமான டி-ஷர்ட்களை சுற்றி வைத்திருந்தார்.. அந்த டி-ஷர்ட்கள் கீழேவிழுந்துவிடக் கூடாது என்பதற்காக கயிற்றினால் அவைகளை கட்டி வைத்தும் இருந்தார்... சட்டைக்குள் இருந்து ஒவ்வொரு டி-ஷர்ட்டையும் வெளியே எடுத்தார்.. மொத்தம் 40 டி-ஷர்ட்கள் இருந்தன.. அதற்கு பிறகு பேன்ட்டையும் கழட்ட சொன்னார்கள்.

3 நிமிடங்கள்
முதலில் தயங்கினார்.. பிறகு அதையும் கழட்டினார்.. பேன்ட்டிற்குள்ளும் இதேபோல காஸ்ட்லி டி-ஷர்ட்டுகள் திருடி வைத்து கட்டியிருந்தார்.. மொத்தம் 57 டி-ஷர்ட்களை கைப்பற்றினர்... கம்பெனியை விட்டு குண்டாக வெளியே வந்தவர் வெறும் 3 நிமிடத்தில் பழைய மாதிரி சுருங்கிய நிலைக்கு வந்துவிட்டார். அதன்பிறகு அவரை கம்பெனி அதிகாரிகள் எச்சரித்து, வேலையை விட்டு அனுப்பினர்.

அதிர்ச்சி
திருடி உள்ளே மறைத்து வைத்த ஒவ்வொரு டி-ஷர்ட்டையும் கழட்டுவதை ஒருருவர் வீடியோவாகவும் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டார்.. இந்த வீடியோ வைரலாகிறது... திருடிய இந்த டி-ஷர்ட்டுகளை அப்படியே கொண்டுபோய் வெளியே விற்கவும் இளைஞர் திட்டமிட்டதும் தெரியவந்தது.. பாம்பு தோல் உரிப்பது போல ஒன்றின் மேல் ஒன்று அணிந்திருந்த அந்த டி-ஷர்ட்களை ஒவ்வொன்றாக கீழே கழட்டி போடும் இந்த வீடியோவை கண்டு பொதுமக்கள் அதிர்ந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications