சூட்கேஸ் நிறைய ஆணுறைகள்.. ஆபாச படங்கள்.. கனடா தமிழ்ப் பெண்ணின் கொலையில் நீடிக்கும் மர்மம்
மனைவியை கத்தியால் கணவன் குத்திய சம்பவத்தில் விசாரணை நடந்து வருகிறது
Recommended Video
டோரண்டோ: மனைவியை ரோட்டில் துரத்தி துரத்தி கத்தியால் குத்தி கொன்ற நபரின் சூட்கேசில் ஏராளமான ஆணுறைகளும், ஆபாச படங்களும் கிடைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தர்ஷிகாவுக்கு வயசு 27. இலங்கை வாழ் தமிழர். இலங்கையில் வசித்த போது தனபாலசிங்கம் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். தனபாலசிங்கத்துக்கு கனடாவில் வேலை கிடைத்துவிட்டது. ஆனால், தர்ஷிகா இலங்கையில்தான் தங்கியிருந்தார். பிறகு 2017-ல்தான் கனடா சென்றார்.
தர்ஷிகாவின் குடும்பம் ரொம்பவும் ஏழ்மையானது. அதனால் கனடாவில் ஏதாவது வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவலாம் என்று நினைத்தார். இதில்தான் தம்பதிக்குள் சண்டையும் தகராறும் ஏற்பட்டது. இவர்களை குடும்பத்தினராலும் சமாதானம் செய்ய முடியவில்லை.

கத்தி
அதனால் விஷயம் கோர்ட் வரை வந்துவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதியும் தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்திருந்தார். ஆனால், தீர்ப்பையும் மீறி தனபாலசிங்கம் தர்ஷிகாவை சந்தித்ததுடன், கத்தியை கையில் எடுத்துக்கொண்டு துரத்தி துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார். இதை அங்கிருந்த பொதுமக்களே நேரில் பார்த்துள்ளனர்.

விசாரணை
மனைவியை கொன்றுவிட்டு, ஸ்டேஷனில் தனபாலசிங்கம் சரணடைந்தார். இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது சம்பந்தமான விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆணுறைகள்
தனபாலசிங்கம் வைத்திருந்த சூட்கேசுக்குள் ஏராளமான ஆணுறைகள், ஆபாசபடங்கள் இருந்திருக்கின்றன. இதை பார்த்து பதறியுள்ளார் மனைவி. எதற்காக இவ்வளவு ஆணுறைகளை கணவன் தனக்கு தெரியாமல் மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகித்துள்ளார். அதனால் நேரடியாகவே இதை பற்றி கேட்டபோதுதான் அளவுக்கு அதிகமான தகராறு இவர்களுக்குள் வெடித்திருக்கிறது.

நெருக்கம்
இந்த தகராறுக்கு பிறகு இருவருமே நெருக்கமாகவும் இல்லை என்கிறார்கள். மனைவிக்குள் பெட்ரூமில் படுத்தால், தனபாலசிங்கம் ஹாலில் உள்ள சோபாவில் தூங்குவாராம். இப்படி பிரிந்திருந்தாலும், சண்டை மட்டும் குறையவே இல்லை. அப்படி ஒருநாள் நாள் காரில் போகும்போதும், சண்டை தகராறு வந்துள்ளது. அப்போது, தனபாலசிங்கம் ஆத்திரத்தில் மனைவியின் கையை முறுக்கிவிட்டுள்ளார்.

விசாரணை
மேலும் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது தலைகாணியை வைத்து முகத்தை அமுக்கி கொலை செய்ய முயற்சியும் ஏற்கனவே செய்திருக்கிறார். இதில் எல்லாம் மனைவியின் உயிர் போகவில்லை என்பதால்தான், கத்தியை எடுத்து துரத்தி துரத்தி வந்து கொன்றுள்ளார். இதெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இன்னும் நீதிமன்ற வழக்கு, விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications