Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கே.என்.ராமஜெயம் கொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள்! கண் கலங்கி நினைவஞ்சலி செலுத்திய அமைச்சர் கே.என்.நேரு!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது தம்பி கே.என்.ராமஜெயத்தின் 10-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நடைபயிற்சிக்கு சென்ற தனது தம்பியை அடையாளம் தெரியாத நபர்கள் சித்ரவதை செய்து கொலை செய்த நிகழ்வை எண்ணி வீட்டில் கண் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு தழுதழுத்திருக்கிறார் அமைச்சர் நேரு.

கன்னித்தீவு கதையை போல் கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு இழுத்துக் கொண்டே செல்வதும், 10 ஆண்டுகளாக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் நேரு

அமைச்சர் நேரு

அமைச்சர் நேருவின் கடைசி தம்பியான கே.என்.ராமஜெயத்தை திருச்சி மாவட்ட திமுகவினர் எம்.டி. என்று தான் அழைப்பார்கள். அமைச்சர் நேருவிடம் காரியம் சாதிக்க வேண்டும் என விரும்புபவர்கள் முதலில் கே.என்.ராமஜெயத்தை தான் பார்ப்பார்கள். காலை நேரத்தில் அவர் இறகுப்பந்து விளையாடும் இடத்திற்கே கட்சியினர் சென்று மனதில் இருக்கும் கோரிக்கைகளை கொட்டுவார்கள். அதை விளையாடியவாறே செவிமடுத்து தனது அண்ணன் நேருவிடம் எடுத்துச்சொல்லி தன்னை நாடி வந்தவர்களின் மனதை குளிர்விப்பார் ராமஜெயம்.

 கே.என். ராமஜெயம்

கே.என். ராமஜெயம்

இதன் காரணமாக நேருவுக்கு சரிசமமாக திருச்சி திமுகவினர் ராமஜெயத்துக்கும் மரியாதை கொடுக்கத் தொடங்கினர். இதுமட்டுமல்லாமல் நேருவின் மூளையாக செயல்பட்டவரும் ராமஜெயம் தான். நிர்வாகவியல் படித்தவர் என்பதால் யாரிடம் என்ன வேலையை கொடுக்கலாம் என்பது முதல் அதனை செய்து முடிப்பது வரை அண்ணன் நேருவுக்காக சிரமேற்கொண்டு பல்வேறு காரியங்களை செய்து கொடுத்தவர் ராமஜெயம். இப்படி நேருவின் அரசியல் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்ந்த ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார்.

10-ம் ஆண்டு நினைவு

10-ம் ஆண்டு நினைவு

இந்த நிகழ்வை இன்றுவரையுமே அமைச்சர் நேருவால் சிறிதும் ஜீரணிக்கமுடியவில்லை. இந்தச் சூழலில் ராமஜெயத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவர் உயிருடன் இருந்தபோது பார்த்து பார்த்து ஆசை ஆசையாய் கட்டிய கேர் பொறியியல் கல்லூரியில் ராமஜெயம் சிலைக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவினர் பெருமளவில் திரண்டு ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்த நிகழ்ச்சிக்கு தாங்கள் வந்திருக்கிறோம் என்பதை அமைச்சர் நேருவிற்கு தெரியப்படுத்தும் வகையில் அவருக்கும் வணக்கம் போட்டுச் சென்றனர்.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

முன்னதாக வீட்டில் குடும்ப உறவுகளுடன் ராமஜெயத்துக்கு திதி கொடுக்கும் நிகழ்வும் நடந்ததாகவும் அதில் தம்பியை நினைத்து அமைச்சர் நேரு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண் கலங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சூழலில், இப்போது வேகமெடுத்துள்ளது. இதனால் விரைவில் இந்த வழக்கில் முக்கியத் திருப்பங்கள் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+