கிணற்றில் விழுந்த மகன்.. வாய் பேச முடியாத தந்தை.. சைகையால் சொல்லி.. தரையில் புரண்டு.. திருச்சி சோகம
கிணற்றில் தவறி விழுந்து 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்
திருச்சி: கிணற்றில் மகன் விழுந்துவிட்டதை, வாய் பேச முடியாத தகப்பன் சைகையால் சொல்லியதும், இங்குமங்கும் அலைந்து, தரையில் உருண்டு புரண்டு அழுததும் காண்போரை கலங்க செய்தது.. இறுதியில், குளிக்க சென்ற மகன் கிணற்றில் இருந்து சடலமாகவே மீட்கப்பட்டான்.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி வேம்பனூரை அடுத்த வெள்ளபிச்சம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி.. இவர் ஒரு மாற்று திறனாளி.. வாய் பேசமுடியாது.. இவரது மகன் அய்யப்பன்.. 11 வயதாகிறது.. 5-ம் வகுப்பு முடித்துவிட்டு, இந்த வருடம் 6-ம் வகுப்பு படிக்க இருந்தான்.

இந்தநிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அய்யப்பன் சிறுவர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றான்.. திட்டுப் பகுதியில் உட்கார்ந்திருந்த அய்யப்பன் திடீரென தவறி விழுந்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டான்.. தண்ணீரில் தத்தளித்து போராடியே மூழ்கி உயிரிழந்தும்விட்டான்.
இதைப்பார்த்த சக சிறுவர்கள் அலறி அடித்துகொண்டு ஊருக்குள் ஓடிபோய் விஷயத்தை சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தனர்.. அது 80 அடி ஆழ கிணறு என்று தெரிகிறது.. 30 அடிக்கு தண்ணீர் இருந்திருந்ததால், அய்யப்பனை உடனே அவர்களால் மீட்க முடியவில்லை... உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து சிறுவனின் உடலை தேடினார்கள்.
போலீசார் என்ன நடந்தது என்று கேட்டபோது, வாய் பேச முடியாத நிலையில் தன் மகன் கிணற்றில் விழுந்தது குறித்தும், எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்று அய்யப்பனின் அப்பா பழனிசாமி பதறி அழுதபடியே சொன்னார்.. இங்கும் அங்கும் நிற்காமல் அவர் பித்துபிடித்தபடி அலைந்தபடியே இருந்தார்.. அய்யப்பனை மீட்டு கொண்டு வந்துவிடுவார்கள் என்று அவரை யாராலும் சமாதானம்கூட செய்ய முடியவில்லை.
ஒருவழியாக நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர், அய்யப்பனின் உடலை மீட்டு மேலே கொண்டு வரப்பட்டது. மகனின் சடலத்தை கண்டு, பழனிசாமி தரையில் புரண்டு அழுதது காண்போரை கலங்க செய்தது.. இதையடுத்து, அய்யப்பனின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications