திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுஜித் மீட்புப் பணி.. குழி தோண்டுவதில் தாமதம் ஏன்?.. இதுதான் காரணம்... ராதாகிருஷ்ணன் விளக்கம்

துளையிட எப்படியும் 12 மணி நேரம் ஆகும் என்கிறார் கமிஷனர் ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

Recommended Video

    முழுமையாக குழி தோண்ட 12 மணி நேரமாகும் - ராதாகிருஷ்ணன்

    மணப்பாறை: குழந்தை அதே இடத்தில்தான் இருக்கிறது.. ஏர்லாக், பிரஷர் மூலம் குழந்தையை பிடித்து வைத்துள்ளோம்.. முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரமாகும்.. 40 அடி வரை தோண்டப்பட்ட நிலையில் பள்ளம் தோண்டும் பணி 98 அடி வரை நடைபெறும்" என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    குழந்தை சுஜித் தவறி விழுந்த நடுக்காட்டுப்பட்டியில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

    பின்னர் மீட்பு பணி குறித்த சந்தேகங்களுக்கு பதில் சொல்ல வேண்டி உள்ளது என்று செய்தியாளர்களிடம் கூறிய ராதாகிருஷ்ணன் கொட்டும் மழையிலேயே மீட்பு பணி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தீப்பிடிக்கும் அபாயம்

    தீப்பிடிக்கும் அபாயம்

    குழி தோண்டுதில் திருப்தி தரும் வகையில் முன்னேற்றம் இல்லை. ஆனால், சுஜித் மீட்புப் பணிகள் வெளிப்படையாக நடைபெறுகின்றன. பாறையில் வேகமாக துளையிட்டால் ஆழ்துளை கிணற்றில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.

    நெகிழ வைத்த மணப்பாறை எம்எல்ஏ.. கிட்னி ஆபரேஷன் செய்த நிலையிலும் சுஜித் கிராமத்தில் முகாம்!நெகிழ வைத்த மணப்பாறை எம்எல்ஏ.. கிட்னி ஆபரேஷன் செய்த நிலையிலும் சுஜித் கிராமத்தில் முகாம்!

    புதிய பள்ளம்

    புதிய பள்ளம்

    ஓன்ஜிசி நிபுணர்கள் ஆலோசனைபடிதான் துளையிடும் பணி நடக்கிறது. பக்கவாட்டில் குழி தோண்ட மண்ணியல் நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர். புதிய பள்ளத்தின் அதிர்வினால் குழந்தை மீது மண் விழ வாய்ப்பு உள்ளது.

    ஏர்லாக்

    ஏர்லாக்

    குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். குழந்தை அதே இடத்தில்தான் இருக்கிறது. நேற்று முன்தினம் இரவுதான் குழந்தையிடம் அசைவு இருந்தது. 88 அடியிலேயே குழந்தை தொடர்ந்து இருக்கிறது. ஏர்லாக், பிரஷர் மூலம் குழந்தையை பிடித்து வைத்துள்ளோம்

    கடினமான பாறைகள்

    கடினமான பாறைகள்

    குழந்தையின் நிலையை கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். குழந்தையின் நிலை குறித்து பெற்றோருக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது. பாறைகள் கடினமாக இருப்பதால் வேகமாக துளையிட முடியாத நிலை உள்ளது.

    98 அடிக்கு குழி

    98 அடிக்கு குழி

    ஆனால், இதற்கு கீழே கரிசல்மண் தென்பட வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதனால் துளை போடுவதில் சிரமம் இருக்காது என நம்புகிறோம். தொடர்ந்து மீட்பு நடக்க உள்ளது. 40 அடிக்குதான் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்னும் 98 அடி வரை குழி தோண்ட வேண்டும்.

    பலூன் முறை

    பலூன் முறை

    தொழில்நுட்பக்குழு குழந்தை இருக்கும் தூரம் வரை கடைசி வரை செல்லும். ஒரு மணி நேரத்தில் 500 செ.மீ ஆழம் போடப்படுகிறது. இந்த வேகத்தில் சென்றால் எப்படியும் முழுமையாக பள்ளம் தோண்ட 12 மணி நேரம் ஆகும். பலூன் தொழில்நுட்பத்திலும் மீட்பதில் சிரமம் உள்ளது.

    தமிழக அரசு

    தமிழக அரசு

    மீட்பு பணிக்கு என்ன செலவாகுமோ அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும். அதேபோல, குழந்தையை மீட்க யார் வந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்கிறோம். பஞ்சாப் நிபுணர் ஒருவரும் மீட்புப் பணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். குழந்தையை மீட்பதை பாதியில் விட்டுவிட மாட்டோம். மழை பெய்தாலும் சரி, மீட்பு பணி தொடரும்.

    English summary
    2 years old child sujith rescue: 12 hours time to take rescue sujith from borewell, explains radhakrishnan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X