இது ஆக்சன் மேடம்.. 50 மாணவிகளை சீரழித்த சாம்சன்! நெஞ்சு வலிப்பதாக நாடகம்.. முக்காடு போட்டால் போதுமா?
திருச்சி : திருச்சியில் தனது தாய் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது தாய் கிரேஸ் ராணி ஆகியோரை மூன்று நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாய ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது மகனான சாம்சன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சில மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் படிக்கும் மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சாம்சன் மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குழந்தைகள் உதவி எண்ணான 1098 என்ற எண்ணிற்கு ஒரு புகார் வந்தது. அதில் சகாயராணி பணியாற்றும் பள்ளியின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பது போல் கடந்த ஆறு மாதங்களாக சாம்சன் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் மாணவிகளுக்கு சாம்சன் பாலியல் தொல்லை அளித்ததும், அதற்கு உடந்தையாக கிரேஸ் சகாயராணி இருந்ததும் உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சாம்சன் மற்றும் உடந்தையாக இருந்ததாக அவரது தாயும் தலைமை ஆசிரியருமான கிரேஸ் சகாய ராணியை கைது செய்தனர். தொடர்ந்து பத்து மணி நேரத்திற்கு மேலாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இத்தலையில் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முயன்றனர்.
சாம்சன் மருத்துவர் என்பதால் தனக்கு உடல் நலக்குறைவு இருக்கிறது நெஞ்சு வலிக்கிறது என கூறி சோதனைகளை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவு 9 மணி அளவில் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் சென்றனர்.
ஆனால் நீதிபதி விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த போலீசார் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். இருவரையும் மூன்று நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக சாம்சனையும் அவரது தாய் கிரேஸ் சகாய ராணியையும் அழைத்துச் சென்றபோது செய்தியாளர்கள் அவர்களை படம் பிடிக்க போலீசார் விடவில்லை என கூறப்படுகிறது. மேலும் புகைப்படம் எடுக்க முயன்றவர்களுடன் சாம்சன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காவல்துறையினரும் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று அவர்களை செய்தியாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications