நோட் பண்ணுங்க.. “இந்த” முக்கிய ரயில்கள் ஒரு பகுதியாக ரத்து! எத்தனை நாட்கள் தெரியுமா? லிஸ்ட் இதோ
திருச்சி: பொறியியல் பணிகள் காரணமாக முக்கிய விரைவு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்து இருக்கிறது.
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்: இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, "சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி, விஜயவாடா கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூரிலிருந்து தினமும் இரவு 11.35 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - திருச்சி மலைக்கோட்டை (ராக்போா்ட்) அதிவிரைவு ரயிலானது (12653) நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மேற்கண்ட நாள்களில் இரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

மன்னை எக்ஸ்பிரஸ்: சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.55 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மன்னாா்குடி மன்னை விரைவு ரயிலானது (16179) நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.25 க்குப் புறப்படும்.
மங்களூர் ரயில்: சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 க்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலானது (16159) வரும் நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 க்குப் புறப்படும்.
பல்லவன் எக்ஸ்பிரஸ்: காரைக்குடி - சென்னை எழும்பூா்- காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில்களானது ( 12605, 12606) செவ்வாய்க்கிழமை (அக்.31) தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து மாலை 4.15 க்குப் புறப்படும்.
வைகை எக்ஸ்பிரஸ்: மதுரை - சென்னை எழும்பூா் - மதுரை வைகை அதிவிரைவு ரயில்களானது (12635, 12636) செவ்வாய்க்கிழமை (அக்.31) தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து பிற்பகல் 2.20 க்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications