திருச்சி கொரோன வார்டில் இருந்து 6 பேர் டிஸ்சார்ஜ்.. இதுவரை 77 பேரை குணப்படுத்தி அசத்தல்
திருச்சி: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து 6 நபர்கள் பரிபூரண நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
திருச்சி: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்து நேற்று மாலை 6 நபர்கள் பரிபூரண நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், திருச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 93 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 77 நபர்கள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையம் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 5 நபர்களும், திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக மொத்தம் 6 நபர்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையிலிருந்து வருகை புரிந்த முன்னரே நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 1 நபரின் குடும்பத்தைச் சார்ந்த 6 நபர்களும், திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 7 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது திருச்சி மாவட்டத்தினை சார்ந்த 19 நபர்களும், பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த 1 நபர், அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த 2 நபர்களும், சென்னை மாவட்டத்தினை சார்ந்த 2 நபரும், திருச்சிராப்பள்ளி விமானநிலைய தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 3 நபர்களும், இரயில்வே தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 1 நபரும், ஆக கூடுதல் 28 நபர்கள்; சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர்.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு - விலகி இரு - வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க வேண்டும்.திருச்சி மாவட்டத்தை கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications