பன்றி பண்ணையில் "ஹோமோ".. மறுத்த மாணவன்... கோபத்தில் அடித்தே கொன்ற ரவுடி கும்பல்.. திருச்சியில் ஷாக்!
11 வயது சிறுவனை அடித்து கொன்ற நண்பர்கள் கைதாகி உள்ளனர்
திருச்சி: ஹோமோ செக்சுக்கு 6-ம் வகுப்பு மாணவனை கட்டாயப்படுத்தி உள்ளனர்.. அதற்கு அவன் மறுக்கவும், அடித்தே கொன்று புதைத்துள்ளனர்.. இந்த கொடூரத்தை செய்தது 16 வயது சிறுவர்கள் 2 பேர் உட்பட 4 இளைஞர்கள் என்பது பெருத்த அதிர்ச்சி செய்தியாக உள்ளது!
திருச்சி, அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் அலியார்.. இவரது மகனுக்கு 12 வயதாகிறது.. 6 -ம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். ஆனால் இவன் கொஞ்ச நாளாகவே ஸ்கூலுக்கு போகவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், போன 3-ம் தேதி சாயங்காலம் வீட்டில் இருந்து வெளியே போன சிறுவன் திரும்பவும் வரவே இல்லை.. இதனால் பயந்துபோன பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்து, கடைசியில் 6-ம் தேதி அரியமங்கலம் போலீசில் புகார் தந்தனர். அதனடிப்படையில் போலீசாரும் சிறுவனை தேடியும், விசாரித்தும் வந்தனர்.

கயல்விழி தம்பதி
அப்போதுதான், கொஞ்சநாளாகவே சிறுவன், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சேகர், அதிமுக மாஜி கவுன்சிலர் கயல்விழி தம்பதியின் மகன் இளவரசன், மேலும் சிலருடன் சுற்றி கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் இளவரசன் 18, சரவணன் 19, லோகேஷ் 16, வீராச்சாமி 16, போன்றோரை பிடித்து விசாரித்தனர்.

பன்றி பண்ணைகள்
அப்போதுதான் பகீர் தகவல் வெளியானது.. அந்த பகுதியின் எல்லையில் பன்றி பண்ணைகள் இருக்கிறதாம்.. இது ஒதுக்குப்புறமாக இருக்கும் இடமாம்.. இந்த பண்ணைகள் உள்ள இடத்தில் இவர்கள் எல்லாரும் ஹோமோ செக்சில் ஈடுபடுவார்களாம்.. சம்பவத்தன்றும் சிறுவனை அழைத்து இங்குதான் அழைத்து வந்து.. ஹோமோ செக்ஸ்க்கு கட்டாயப்படுத்தி உள்ளனர். அதற்கு சிறுவன் ஒத்துக் கொள்ளவில்லை.. இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் அனைவருமே அவனை அடித்தே கொன்றுள்ளனர்.

சடலம்
சடலத்தை அங்கிருந்த ஒரு குப்பை கிடங்கிற்கு தூக்கிச்சென்று புதைத்தும் உள்ளனர்.. இதை கேட்டு போலீசாரே அதிர்ந்து போய்விட்டனர். இதையடுத்து, கொலையாளிகளை போலீசார் அந்த குப்பை கிடங்கிற்கு அழைத்துச் சென்று சிறுவன் சடலத்தை தோண்டி எடுத்தனர். அங்கேயே போஸ்ட் மார்ட்டமும் செய்தனர்.

கைது
12 வயது சிறுவனை ஹோமோ செக்சுக்கு கட்டாயப்படுத்தியதுடன், அதற்கு மறுப்பு சொன்னதால், கொலையும் செய்து புதைத்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கொலையாளிகளில் 2 பேர் 16 வயது சிறுவர்கள் என்பது அதைவிட அதிர்ச்சி நிறைந்த கவலையை தந்துள்ளது. இவர்கள் எல்லோருமே இப்போது விசாரணையில் உள்ளனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications