ரயிலை கவிழ்க்க சதி? தண்டவாளத்தில் டயர்.. சந்தேகத்தின் பேரில் 8 பேரை கைது செய்தது தனிப்படை!
திருச்சி : திருச்சி அருகே மேலவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் வைக்கப்பட்டு, விபத்து ஏற்படுத்த முயன்ற விவகாரத்தில் 8 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி - சென்னை ரயில்வே வழித்தடத்தில் லால்குடி அருகே மேலவாளாடியில் கடந்த 1ஆம் தேதி இரவு தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த வழியாக சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார்.

ஆனாலும், ரயில் டயர் மீது மோதியது. நிமிர்த்தி வைக்கப்பட்டிருந்த ரயில் தெறித்தது. இதில் படுக்கைவசமாக வைக்கப்பட்டிருந்த டயர் என்ஜின் அடிப்பகுதியில் சிக்கியதால் அங்கு இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டு பழுதாகி நின்றது. மேலும் ரயிலின் என்ஜின் உள்பட 4 பெட்டிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து விருதாச்சலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டவாளத்தின் குறுக்கே டயர்களை வைத்ததில் சதி செயல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இன்று திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், தனிப்படை போலீசாரின் முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய 8 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் மூலம் சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஜேசிபி ஓட்டுநர் ஒருவர், ரயில்வே கேட்டிற்கு அருகே ரயில்வே லைன் வயர்களை சேதமக்கியதும் இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் பழிவாங்குவதற்காக இந்த விஷம செயலில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications