திருச்சி லேடீஸ் ஹாஸ்டலில் காதலியுடன் இளைஞர் உல்லாசம்.. தாழ்ப்பாள் போடாததால் சட்டென வந்த பெண்
திருச்சி: திருச்சி மகளிர் விடுதியில் அறையின் கதவை தாழ்ப்பாள் போடாமல் காதலியுடன் இளைஞர் ஒருவர் உல்லாசமாக இருந்துள்ளார். இதை கதவை திறந்து பார்த்ததும் கூச்சலிட்ட பெண்ணை, இளைஞர் மிரட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாநகரம் கடந்த 15 வருடங்களில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. சென்னையைப் போல் இங்கும் ஏராளமான புதிய நிறுவனங்கள் உருவாகி உள்ளது. நிறைய பேர் அறை எடுத்து தங்கி வேலை செய்து வருகிறார்கள். திருச்சியில் பல்வேறு கல்லூரிகள் இருப்பதால், கல்லுரிகளில் படிப்பதற்காகவும் பலர் அறை எடுத்து தங்கி உள்ளனர். திருச்சியில் ஏராளமான விடுதிகள் இருக்கின்றன.

பிஜி எனப்படும் இந்த மகளிர் விடுதிகளில் தங்கியபடி ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இதேபோல் பல மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மகளிர் விடுதிகளில் பொதுவாக ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோரை தவிர வெளியாட்கள் அவ்வளவு எளிதாக போக முடியாது.
இந்நிலையில் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், பியூட்டிசியன் கோர்ஸ் ஒன்றை திருச்சி தில்லைநகரில் உள்ள நிறுவனத்திற்கு சென்று படித்து வந்தார். இதற்காக அந்த பெண் அங்குள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறார்.
சம்பவம் நடந்த அன்று அந்த இளம் பெண் வழக்கம் போல் பயிற்சி முடிந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பி சென்றுள்ளார். பின்னர் அறையில் தங்கி இருக்கும் தோழியை பார்க்க சென்றிருக்கிறார். அந்த அறையின் கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்த நிலையில் திடீரென கதவை தள்ளித் திறந்தார்.
அப்போது தனது தோழியுடன் ஒரு இளைஞர் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த இளம் பெண் கூச்சலிட்டார். உடனே அந்த இளைஞர் பதறி அடித்தபடி ஓடி வந்ததுடன், அந்த பெண்ணின் அருகில் வந்து, வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து ஓடி போய்விட்டாராம்.
பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த இளம் பெண் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் தில்லை நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் என்பதை கண்டறிந்தனர்.
இந்த வாலிபரும், விடுதியில் தங்கியிருந்த அந்த இளம்பெண்ணும் காதலித்து வந்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த அன்று விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் அத்துமீறி புகுந்த அந்த இளைஞர்.. காதலியிடம் எல்லை மீறியதாக சொல்லப்படுகிறது. கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்த நிலையில் திடீரென அந்த பெண் அங்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications