சமயபுரம் மாரியம்மனுக்கு ஆடியில் அள்ளிக் கொடுத்த பக்தர்கள்.. உண்டியல் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 62 லட்சம் கிடைத்துள்ளது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஸ்ரீரங்கநாதனின் தங்கையாக பக்தர்களால் போற்றப்படுகிறார் சமயபுரம் மாரியம்மன்.
Recommended Video

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், 'வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அருளும்' அம்மன் அருள்பாலிக்கும் ஸ்தலமாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து சமயபுரம் மாரியம்மன் என்றே அழைக்கப்படுகிறார்.
கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன.

சமயபுரம் மாரியம்மன்
மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் பூச்சொரிதல் விழாவும் அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

அம்மன் அருள்
சமயபுரம் மாரியம்மன் தன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலிவரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச் செலுத்துகிறார்கள். ஏராளமான பக்தர்களுக்கு அம்மனுக்கு உண்டியல் காணிக்கையும் செலுத்துகின்றனர்.

பக்தர்கள் காணிக்கை
ஆடி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் அதிகம் செலுத்தியுள்ளனர். இதுகுறித்து திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும்.

உண்டியல் காணிக்கை
ஆகஸ்ட் 18 தேதி வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். இதில் திறக்கப்பட்ட 15 உண்டியல்கள் மூலமாக 1.62 கோடி ரொக்கம், 2 கிலோ 748 கிராம் தங்கம், 6 கிலோ 462 கிராம் வெள்ளி, 160 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications