யாருப்பா இது.. வெல்லமண்டி பக்கத்தில்.. திடீரென மைக்கை எடுத்து.. திகைத்து போன திருச்சி.. செம..!
அதிமுக அமைச்சரின் பேத்தி ஜெயலலிதா போலவே வேடமிட்டு வாக்கு சேகரித்தார்
திருச்சி: திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சிறுமியை கண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சியின் 18ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடி அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போதுதான், பக்கத்தில் இருந்த அந்த உருவத்தை மக்கள் பார்த்தனர்.. இரண்டு விரல்களையும் காட்டி, அச்சு அசல் ஜெயலலிதாவை போலவே இருந்தார்..!

அதே மாதிரி டிரஸ், அதே மாதிரி கொண்டை, அதே மாதிரி கண்ணாடி என வேனில் நின்று கொண்டிருந்தார்.. திடீரென மைக்கை எடுத்த அந்த குட்டி பெண், "மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்" என்று பேச ஆரம்பித்ததும், கைத்தட்டல்கள் அதிர கேட்டன..
சிறந்த பேச்சாளரை போலவே பேச்சை ஆரம்பித்தார்.. இறுதியில் "அதிமுகவுக்கு இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க" என்று அந்த சிறுமி பேசி முடித்ததும், அவர் யார் என்று தெரிந்து கொள்ள அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வமானார்கள்.
பிறகுதான் தெரிந்தது அவர் பெயர் சாய் மித்ரா.. 10 வயதாகிறது.. 4-ம் வகுப்பு படிக்கிறாராம்.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் பேத்தி என்பதும், தாத்தாவுக்காக வாக்கு சேகரித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது..
இப்படித்தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள்களும் விராலிமலையில் அப்பாவுக்காக தொகுதியில் வாக்கு கேட்டு வருகிறார்கள்.. அந்த இரு பிள்ளைகளை போலவே சாய் மித்ராவும் தைரியமாகவும், பயமில்லாமலும் கேஷூலாகவும் பேசி வாக்கு கேட்டு வருவதை தொகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகிறார்கள்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications