சேலத்தில் எடப்பாடி.. திருச்சியில் அமித்ஷாவுடன் மீட்டிங் போட்ட அதிமுக மூத்த தலைகள்! என்ன நடந்தது?
திருச்சி: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். திருச்சியில் தங்கியுள்ள அமித்ஷாவுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, ரத்தினவேல், ப. குமார், சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இதில் சட்டமன்ற தேர்தலில் வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருந்தார். பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழகத்திற்கு இன்று வருகை தந்த அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் நடைபெற்ற மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருந்ததால், அவர் அமித்ஷாவை சந்திக்க செல்லவில்லை. அதேநேரத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் அமித்ஷாவை சந்தித்துள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் கொதிக்க ஆரம்பித்துள்ளது. வரும் தேர்தலில் ஆளும் திமுக அரசை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
தேமுதிக, பாமக, ஓபிஎஸ், டிடிவி தினகரனின் அமமுக கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், டிடிவி தினகரன், ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தவெக பக்கம் போகலாம் என்ற பேச்சும் எழுந்து வருகிறது.
பெரும் இழுபறி நீடிப்ப்பு
ஆனால் இருவருமே இதுபற்றி வெளிப்படையாக பேசவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வத்தை இணைப்பதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் எத்தனை தொகுதிகள் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்பதில் பெரும் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல, இன்னும் பிடிகொடுக்காமல் இருக்கும் தேமுதிக தங்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை வரும் 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. பாமகவில் தந்தை - மகன் மோதல் உச்சத்தில் உள்ளது. இரு பிரிவுகளாக பாமக செயல்பட்டு வரும் நிலையில், அந்த கட்சியின் நிலைப்பாடும் இன்னும் உறுதியாகவில்லை.
நாளை சந்திக்கிறாரா எடப்பாடி?
இப்படியாக இடியாப்ப சிக்கலில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ள நிலையில்தான் இன்று தமிழகத்திற்கு அமித்ஷா வந்தார். அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இன்று அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறவில்லை. இந்த சூழலில்தான் அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று அமித்ஷாவை சந்தித்தனர்.
அமித்ஷா நாளையும் திருச்சியிலே தங்கியிருப்பதால், எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனினும், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இத்தகைய சூழலில்தான் அமித்ஷாவை வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications