திருச்சியில் "நம்ம ஊரு மோடி பொங்கல்".. கோலாகல கொண்டாட்டம்.. அமித்ஷா பங்கேற்பு
திருச்சி: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று தமிழகம் வந்திருந்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரை பிரசாரத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அமித்ஷா நேற்று பங்கேற்றார். அதைத்தொடர்ந்து, இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறவுள்ள மோடி பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை பள்ளத்திவயல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தில் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாலை வழியாக திருச்சிக்கு வந்த அமித்ஷா ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.
2 ஆம் நாளான இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து, இன்று மாலை மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற உள்ள "நம்ம ஊரு மோடி பொங்கல்" விழாவில் பங்கேற்கவுள்ளார். இதில், ஆயிரத்து 1200 பேர் கலந்து கொள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்பாடு பணிகளை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
ராணுவ மைதானத்தில் வைக்கப்படும் பொங்கலை அனைவரும் பார்ப்பதற்கு பிரமாண்ட இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1,008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டது பொங்கல் செய்யப்பட்டது. இந்த விழாவை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, பகல் 1 மணிக்கு கார் மூலமாக திருச்சி விமான நிலையம் சென்ற அமித் ஷா அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications