தொட்டதுக்கெல்லாம் கோபம் மண்டைக்கு ஏறுதாம் சாருபாலாவுக்கு.. டென்ஷனில் தினகரன்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமானுக்கு தொட்டதுக்கெல்லாம் கோபம் வருதாம். கத்தி விடுகிறாராம். இதனால் டிடிவி தினகரன் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறாராம்.

அமமுக சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் மேயரான சாருபாலா தொண்டைான். அம்மணி புது்ககோட்டை ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனால் எல்லாமே ரைட் ராயல்தானாம்.

கோபம் முனுக் முனுக்கென்று வந்து விடுகிறதாம். அதுவும் சொந்தக் கட்சிக்காரர்களிடமே அடிக்கடி கோப்படுகிறாராம். இதனால் இவருடன் வேலை செய்வது என்பது பெரிய டென்ஷனாக இருப்பதாக கட்சியினர் முகம் சுளிக்கின்றனராம்.

கோபம்

கோபம்

சாருபாலா தொண்டைமான் தொட்டதிற்கெல்லாம் நிர்வாகிகளிடம் கோபத்தை காட்டுவதால் பஞ்சாயத்து டி.டி.வி.வரைக்கும் சென்றுள்ளதாம். நேற்று திருநெடுங்குளம் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற சாருபாலாவை, அமமுகவினர் மறிக்காத குறையாக கூடி நின்று தங்களுக்கு பணம் இன்னும் வரலை என தெரிவித்தார்களாம்.

கோபித்துக் கொண்டார்

கோபித்துக் கொண்டார்

மேலும் பணம் தராவிட்டால் தேர்தல் பணியாற்ற முடியாது எனவும் அவர்கள் கூறினார்களாம். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சாருபாலா தொண்டைமான் ஒன்றியச்செயலாளரை அழைத்து என்னய்ய நடக்குது இங்க என லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு பிரச்சாரமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எனக் கோபித்துக்கொண்டு நேராக வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

தினகரனிடம் புகார்

தினகரனிடம் புகார்

இது டி.டி.வி.வரைக்கு போய் பஞ்சாயத்து செய்யப்பட்டதாம். மேலும், குறித்த நேரத்தில் வேட்பாளர் ஒட்டுக் கேட்க வர மாட்டிங்கிறார், அவர் வருவதே சரியான நேரம் எனக் கருதுகிறார் என காதைக் கடிக்கின்றனர் உள்ளூர் அமமுகவினர். என்னதான் இருந்தாலும் அவங்க மன்னர் குடும்பமாச்சே, இருக்காதா பின்னே.

மக்களிடமும் காட்டுவாரோ

மக்களிடமும் காட்டுவாரோ

அது சரி இப்படி பொசுக் பொசுக்கென்று கோபம் வருவோரை மக்கள் தேர்ந்தெடுத்தால் பிறகு மக்கள் நாளைக்கு ஏதாவது கேள்வி கேட்டாலும் இப்படித்தான் கோபம் காட்டுவாரா சாருபாலா தொண்டைமான். இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாதுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+