பாலியல் புகார்கள்.. உண்மையை மூடி மறைக்கக்கூடாது.. பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் விடுத்த எச்சரிக்கை!
திருச்சி : பாலியல் புகார்களை மாணவிகள் தெரிவிக்கும்போது அதை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.
அதே சமயம் காழ்ப்புணர்ச்சி காரணமாக பள்ளிகள் மீது வரும் புகார்களையும் முழுமையாக விசாரித்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி
சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணிமனையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அன்பில் மகேஷ் பேட்டி
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "திருச்சியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தது போல் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கி வைக்க உள்ளோம். இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

மாணவர்களின் நலனே முக்கியம்
பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பிரச்சனைகள் வரும்போது அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இதனால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் பிரச்சனையை பெரிதுபடுத்துவதில்லை. அப்படி அஜாக்கிரதையாக இருப்பதால்தான் மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகள் எடுத்துவிடுகின்றனர்.

பெற்றோரிடம் பேசியிருக்கலாம்
எனவே மாணவர்கள் மனம் விட்டு தங்கள் பிரச்சனையை தெரிவிக்கும்போது, பள்ளி நிர்வாகம் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குறைந்தபட்சம் மாணவியின் பெற்றோரையாவது பள்ளி நிர்வாகம் அழைத்து பேசி இருக்கலாம். எனவே பிரச்சனைகளை மூடி மறைக்க பள்ளி நிர்வாகங்கள் முயற்சி செய்யக்கூடாது.

கடுமையான நடவடிக்கை
அதே சமயம் மாணவர்கள் தரப்பில் இருந்து வரும் எல்லா புகார்களையும் அப்படியே நம்பிவிடாமல் முழுமையாக விசாரித்த பின்னரே பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குக் காரணம் காழ்ப்புணர்ச்சியால் புகார்கள் வந்திருந்தால் தேவையில்லாமல் பள்ளியின் பெயர் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான். அதே சமயம் பள்ளியில் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் போக்சோ மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
Recommended Video

கட்டணம் நிர்பந்தித்து வசூலிக்கக் கூடாது
சில தனியார் பள்ளிகள் ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்துமாறு பெற்றோரை நிர்பந்திப்பதாக புகார்கள் வருகிறது. இதுபோன்று நிர்பந்தித்து கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என நீதிமன்றமே தெரிவித்து உள்ளது. இந்த புகார்கள் மீது முகாந்திரம் இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications