தம்பி நீ ஏன் அலையுற... பூரா ஓட்டும் உனக்குத் தான்... அன்பில் மகேஷை நெகிழ வைத்த மூதாட்டி..!
திருச்சி: திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த இரண்டு நாட்களாக கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிர்வாகத்தின் கீழ் மணப்பாறை, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய 3 தொகுதிகள் வருகின்றன. இந்த மூன்று தொகுதிகளுக்கான பொறுப்பை அன்பில் மகேஷ் ஏற்றிருப்பதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே தேர்தல் பணிகளை தொடங்கி செய்து வருகிறார்.

இந்நிலையில் தாம் போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம், பனையக்குறிச்சி, குவளக்குடி, கீழமுல்லைக்குடி, உள்ளிட்ட ஊராட்சிகளில் கடந்த 2 நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அப்போது திருநெடுங்குளம் ஊராட்சியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், ''தம்பி நீ ஏன் அலையுற, பூரா ஓட்டும் உனக்குத் தான்'' என அன்பில் மகேஷின் கரங்களை பற்றி உரிமையுடன் கூற, அதைக் கேட்டு அவர் நெகிழ்ந்துவிட்டார்.

இதேபோல் குவளக்குடி, கீழமுல்லைக்குடி கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அன்பில் மகேஷுக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும், பெண்களும் தடபுடல் வரவேற்பு கொடுத்து அசத்தினர். இதனிடையே திருச்சி பெல் நிறுவன ஊழியர்களிடம் ஓட்டு கேட்டுச் சென்ற அன்பில் மகேஷை, 'இப்போதே வெற்றி பெற்றுவிட்டீர்கள்' என குரல் எழுப்பி மகேஷை தோளில் தூக்கி வைத்து பெல் ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர்.
தனது தொகுதியுடன் கூடுதலாக இரண்டு தொகுதிகளையும் சேர்த்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால், கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார் அன்பில் மகேஷ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications