தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் இதுதான்!
திருச்சி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நீடிக்கும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில்
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அவர் கூறியதாவது: தற்போதைய சூழலில் கொரோனா பிரச்னையில் மட்டுமே தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழக முதல்வரும் இதற்கே முன்னுரிமை அளித்துப் பணியாற்றி வருகிறாா்.

ஆலோசனை
எனவே, பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது ஆலோசிக்க வேண்டியதில்லை. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்தால் மட்டுமே பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். மேலும், இந்த இக்கட்டான சூழலில் பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்கிறோம்.

உயர் கல்வி
அந்த வகையில், முசிறியில் நோயாளிகளுக்குப் போதிய படுக்கைகள் கிடைக்காததால் அந்தப் பகுதி பள்ளியில் படுக்கை வசதி செய்து கொள்ளலாம் என அத் தொகுதி எம்எல்ஏவும் பரிந்துரைத்துள்ளாா். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டே உயா்கல்வியில் மாணவா்கள் சேர இயலும்.

வசூல்
எனவே, கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தப்படும். பள்ளிகள் திறக்காத நிலையிலும் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என சில தனியாா் பள்ளிகள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாகப் புகாா்கள் வருகின்றன.

கல்விக் கட்டணம்
இதுதொடா்பாக, பள்ளிகளுக்கான கல்விக் கட்டண குழுவுக்கு வரப் பெறும் புகாா்களின்பேரில் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்தப் புகாா்கள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications