கவலைப்படாதீர்கள்... நான் இருக்கிறேன்... பார்வையற்ற மூதாட்டிக்கு தேடிச் சென்று உதவிய அன்பில் மகேஷ்
திருச்சி: திமுக திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ், பார்வையற்ற மூதாட்டி ஒருவருக்கு அவரது வீடு தேடிச் சென்று நிதியுதவி வழங்கியுள்ளார்.
திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளிலும் கொரோனா கால நிவாரணப் பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்து வருகிறார் அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ.. நிர்வாகிகள் எந்நேரம் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்பதாலும், அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்கும் வழக்கம் உள்ளதாலும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னால் பெரிய பட்டாளமே அணி வகுத்து நிற்கிறது.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட எடத்தெருவில், லதா என்ற பார்வையற்ற மூதாட்டி கவனித்துக்கொள்ள ஆளின்றி வசித்து வருவதாகவும், அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும் ஒன்றிணைவோம் வா செயல்திட்டம் மூலம் அறிவிக்கப்பட்ட உதவி எண்ணுக்கு சிலர் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இது அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கவனத்திற்கு சென்றவுடன் அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையுடன் அந்த மூதாட்டி இல்லத்திற்கு சென்ற இவர் அதனை வழங்கியதோடு நிதியுதவியும் அளித்தார்.
மேலும், கவலைப்படாதீர்கள் எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை அழைத்து தெரிவியுங்கள் என அன்பில் மகேஷ் அந்த மூதாட்டிக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்தார். இதனால் நெகிழ்ந்துபோன அந்த பார்வை திறனற்ற மூதாட்டி லதா, மனம் குளிர்ந்து அன்பில் மகேஷை வாழ்த்தி தனது உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தினார்.
இதனிடையே மூதாட்டி லதா இல்லம் அமைந்துள்ள பகுதி மிகவும் குறுகலான தெரு என்பதால், அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வருகிறோம் என நிர்வாகிகள் கூறிய நிலையில் அதனை வேண்டாம் என தடுத்த அன்பில் மகேஷ், உதவிக் கேட்டு அழைத்த அந்த மூதாட்டி இல்லத்திற்கு தாமே சென்றது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications