புதுக்கோட்டை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
திருச்சி: திருச்சியில் முதியோா்களுக்கான அன்புச் சோலை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) தொடங்கிவைத்தார். ரூ.767 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காகவும், வீடுகளில் உள்ள முதியவா்கள் மனம் சோா்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையிலும் தமிழக அரசால் 'அன்புச் சோலை திட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திருச்சியில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் அன்புச்சோலை - முதியோா் மனமகிழ் மையங்கள், மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளா்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாகச் செயல்படும்.
மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூா், ஈரோடு, தூத்துக்குடி, வேலூா், தஞ்சாவூா், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா இரு அன்புச் சோலை மையங்கள், தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா ஒரு மையம், சென்னை மாநகராட்சியில் தண்டையாா்பேட்டை, சோழிங்கநல்லூா், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா ஒரு மையம் என மொத்தம் 25 அன்புச் சோலை மையங்கள் ரூ.10 கோடியில் தொடங்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு அம்சம்
இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும். பகல் நேரங்களில் மட்டும் செயல்படும் இந்த மையங்களில், முதியவா்கள் தோழமை மற்றும் அா்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். முதியோா் எளிதில் சென்றும் வகையில் போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அன்புச் சோலை மையங்களுக்கு வரும் முதியவா்களுக்கு, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளா்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளா்கள் பணியமா்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும். அன்புச் சோலை மூலமாக, முதியோா் குடும்பப் பிணைப்பைத் தொடா்ந்தே, பாதுகாப்பான சூழலில், அா்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும்.
அன்புச் சோலை திட்டம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் இரு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறாா். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.767 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் தொடங்கியும் வைத்தார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடா்ந்து திருச்சியில் நடைபெறும் விழாவில் அன்புச் சோலை திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டைக்கு 6 புதிய அறிவிப்புகள்
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அறந்தாங்கி வட்டத்தில் உள்ள வீரகொண்டான் ஏரி, செங்கழுநீர் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ. 15 கோடி செலவில் புனரமைக்கப்பு செய்யப்படும்.
கீரமங்களம் பகுதியில் சாகுபடி செய்யப்படும். காய்கறி, பழங்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க குளிர்பதனக் கிடங்கு ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். வடகாடு ஊராட்சியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் உயர்நிலைப் பாலங்கள் கட்டப்படும்.
புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும். கந்தர்வக்கோட்டை ஊராட்சி, பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்படும். பொன்னமராவதி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications