தமிழகத்தில் பாஜகவுக்கு 25 எம்.பி.க்கள் உறுதி! திமுகவின் ஊழல்களை புகாரளிக்க டோல் பிரீ எண் -அண்ணாமலை
திருச்சி: 2024-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக 25 இடங்களில் வெல்வது உறுதி என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுகவின் ஊழல்கள் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்க பாஜக சார்பில் டோல் பிரீ எண் ஆரம்பிப்பது பற்றி யோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். அது தொடர்பான மேலும் விவரம் வருமாறு;

8 ஆண்டுகால ஆட்சி
''கடந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வீடில்லாத ஏழைகளுக்கு இதுவரை 52 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இனி கட்டப்படும் 16 லட்சம் வீடுகள் நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்படுகின்றன. 17 கோடியே 96 லட்சம் ஆயுஸ்மான் பவன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. நெல் மற்றும் கோதுமையின் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு 30 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.''

7 லட்சம் வேலைவாய்ப்பு
''இந்தியாவில் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 2014 க்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு 228 சிலைகள் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை எட்டு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது. இன்று முதல் வரும் 15ம் தேதி தேதி வரை பாஜக சார்பில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம்.''

25 எம்.பி.க்கள்
''பாரதி ஜனதா கட்சி மிகப்பெரிய வளர்ச்சி பாதையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மக்களின் அன்பைப் பெற்று நம்பர் ஒன் ஆக வருவதற்கு கடினமாக உழைப்போம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. தினசரி ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பலர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தி ஆட்சியின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.''

டோல் பிரீ எண்
''யார் வேண்டுமானாலும் பாஜகவில் சேரலாம். மூத்த தலைவர்கள் இதுகுறித்து முடிவெடுப்பார்கள். சசிகலா பாஜக கட்சியில் சேரலாம் என்று நயினார் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 25 எம்.பி.க்கள் பிஜேபிக்கு கிடைக்கப் போகிறார்கள். எங்கள் கவனத்திற்கு வரும் ஊழல்களை மக்கள் மன்றத்தில் வைக்க உள்ளோம். திமுக ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து புகார் தெரிவிக்க டோல் பிரீ எண் ஆரம்பிக்கலாம் என யோசிக்கிறோம்.''
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications