தமிழகத்தில் தாமரை அல்ல, ஒரு புல் கூட முளைக்காது.. திருச்சியில் அதிரடி காட்டிய ஸ்டாலின்!
தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
Recommended Video

திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சியில் நடக்கும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இருக்கிறார்கள் .
திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக மற்றும் மத்திய அரசை குற்றம்சாட்டி ஸ்டாலின் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேகதாது குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

காவிரி அருமை
அவர் தனது பேச்சில், காவிரி கர்நாடகாவில் உற்பத்தியானாலும், அது தமிழகத்தில்தான் அதிகம் பாய்கிறது. இது பெரிய வரம். ஆனால் இதை தடுக்க மத்திய அரசுடன் சேர்ந்து கர்நாடக அரசு சதி செய்து வருகிறது. மேகதாது அணைக்கட்டினால் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் வராது.

மேகதாது விவகாரம்
மேகதாது விவகாரத்தில் தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ போராடவில்லை. காவிரியை தடுக்கும் பணிகளில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது. தமிழக விவசாயமே நாசம் அடையும்.

மத்திய அரசின் செயல்
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்பது தெரிந்ததால், கர்நாடகா மீது அவர்களுக்கு பாசம். குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பாஜக. கஜா புயல் போன்ற பேரிடர் வேறு மாநிலத்தில் நிகழ்ந்திருந்தால், பிரதமர் நேரில் சென்று பார்த்திருக்கமாட்டாரா?. இயற்கை இடர்பாட்டை ஏற்றுக்கொள்ளலாம், மேகதாது போன்ற மத்திய அரசின் செயற்கை இடர்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

தாமரை மலராது
மேகதாது பிரச்சனைக்கு முழு காரணம் தமிழக அரசும், மத்திய அரசும் தான். கஜா நிவாரணம் தராத மத்திய அரசுக்கு தமிழக மக்கள் ஏன் வரி செலுத்த வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளராத நிலையில், தாமரை எப்படி மலரும்.

தடை இல்லை
ஏற்கனவே திமுக இது சார்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்தோம். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதில் அதிமுக இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழக அரசால் தடை உத்தரவை கூட பெற முடியவில்லை. தமிழக அரசு அந்த அளவிற்கு செயலற்று இருக்கிறது என்றுள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications