திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலிலேயே இதைச் செய்திருக்கலாமே.. சுஜித் மீட்புப் பணியில் களமிறங்கிய போர்வெல் மெஷின்!

போர்வெல் மிஷினை கொண்டு துளையிடும் பணி நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கையூட்டிய விஜயபாஸ்கர்.. பாராட்டும் நெட்டிசன்ஸ்!

    மணப்பாறை: ரிக் மெஷின் ரிப்பேர் ஆகிவிடுதால், போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளை உடைத்து துளையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுஜித்தை மீட்க கடைசி முயற்சியாக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    குழந்தை சுஜித் குழிக்குள் விழுந்தது முதலே எத்தனையோ மீட்பு வழிமுறைகள் கையாளப்பட்டன. அது எல்லாமே தோல்வி அடைந்துவிட்ட நிலையில்தான், கடைசியாக ரிக் மெஷினை பற்றி சொல்லப்பட்டது.

    இந்த ரிக் மெஷின் பவர்புல் மிஷி என்றும் பாறைகளை இந்த மிஷினால்தான் துளையிட முடியும் என்றார்கள். இத்தாலியில் இருந்து இந்த மிஷினை கொண்டு வந்ததாக சொன்னார்கள். ஆனால் 35 அடி வரை துளையிட்ட போது அது ரிப்பேர் ஆகிவிட்டது. அதனால் 2-வதாக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ரிக் மிஷினை கொண்டு குழி தோண்டினார்கள். ஆனால், 2-வது இயந்திரமும் பழுதானது.

    தேசிய பேரிடர் மீட்புக்குழு வந்ததே லேட்.. அதனால்தான் சிக்கல்.. முதல்வர் தலையிட வேண்டும்.. ஜோதிமணிதேசிய பேரிடர் மீட்புக்குழு வந்ததே லேட்.. அதனால்தான் சிக்கல்.. முதல்வர் தலையிட வேண்டும்.. ஜோதிமணி

    பற்கள்

    பற்கள்

    ஆனால் இதிலும் தொய்வு ஏற்பட்டது. கடினமான பாறைகள் இருப்பதால், இந்த மிஷினும் பழுதாகி விட்டது. இந்த மெஷினில் உள்ள கூர்மையான பற்கள் சீக்கிரமே மழுங்கி விடுவதால், பணி தாமதமானது. இதனிடையே மழை பெய்வதாலும் சிரமம் உள்ளது.

    கயிறு

    கயிறு

    நேற்று இரவு 12 மணியிலிருந்து ரிக் மெஷினை வைத்து 40 அடியில் ஓட்டை போட்ட நிலையில், அதன் போல்ட் நட் ரிப்பேர் ஆகிவிடவும், போர்வெல் மிஷின் மூலம் ஓட்டை போடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, ஒரு தீயணைப்பு வீரர் கயிறு கட்டிக் கொண்டு, ஏற்கனவே தோண்டப்பட்ட அந்த 45 அடி குழிக்குள் இறங்கி, பாறையின் தன்மையை கண்டறிந்தார்.

    ட்ரில்

    ட்ரில்

    பிறகு, குறியீடு செய்துவிட்டு வெளியே வந்ததும், போர்வெல் மூலம் துளையிடும் 1750 குதிரைத் திறன் கொண்ட போர்வெல் மிஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே குழந்தையை மீட்க கடைசி முயற்சி என்றும் சொல்கிறார்கள். இப்போது 6 இன்ச் அளவுக்கு போர்வெல் மிஷின் மூலம் ட்ரில் செய்யப்படுகிறது.

    ஊழியர்கள்

    ஊழியர்கள்

    இந்த போர்வெல் 1 மணி நேரத்தில் 100 அடி வரை தோண்ட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காரணம், இந்த போர்வெல் கம்ப்ரஸர் மிஷின் மூலம் இயங்கக்கூடியது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போர்வெல்லை இயக்கி வருகிறார்கள்.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    ரிக் மிஷினை கொண்டு முதன்முதலில் துளையிட வரும்போதும், இந்த மிஷினை ஏன் முதல்நாளிலேயே பயன்படுத்தவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது போர்வெல் மிஷினை வைத்து துளையிடுவதாக சொல்லும் நிலையில், இந்த முறையையும் ஏன் முதல் நாளிலேயே கையாளவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    ஏர்லாக்

    ஏர்லாக்

    26 அடியில் குழந்தை இருந்தபோதே, ஏர்லாக் மூலம் பிடித்து வைத்திருக்கக்கூடாதா, இப்படி 88 அடி ஆழத்திற்கு சென்றபிறகுதான் ஏர்லாக் மூலம் பிடித்து வைக்க வேண்டுமாஎன்ற கேள்வியும் எழுகிறது. 3 துளைகள் இடப்பட்டு, திரும்பவும் ரிக் மெஷினை பயன்படுத்தி ஏற்கனவே போட்ட துளை அகலப்படுத்தப்படும் என்கிறார்கள். ஒரு வினாடி கூட வீணாகிவிடக்கூடாது என்பதில் மீட்பு குழுவினர் ஈடுபட்டாலும், இந்த முயற்சி முதலிலேயே இருந்திருக்க கூடாதா என்ற ஆதங்கம் எழ ஆரம்பித்துள்ளது.

    English summary
    2 years old child sujith rescue: borewell being used in boy sujith rescue and public questioned on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X