நீங்க சண்டைபோடுங்க.. நான் தாலிய கட்டுறேன்.. காதலன் ட்விஸ்ட்.. கதறிய பெண்ணின் பெற்றோர்
திருச்சி: திருச்சி காவல் நிலையத்தில் காதலை எதிர்த்த பெற்றோர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பாராதவிதமாக காதலன், தன் காதலிக்கு தாலி கட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருச்சியில் அர்ஜூன் என்ற இளைஞர் 12ம் வகுப்பு படித்து விட்டு டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சிவசங்கரி என்ற இளம் பெண் பிஎட் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளனர். இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு வீட்டு பெற்றோரும் புகார் அளிக்க வந்துள்ளனர். அப்போது காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் இரு வீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்பொழுது யாரும் எதிர்பார்க்காதவிதமாக அர்ஜூன், சிவசங்கரி கழுத்தில் தாலி கட்டினார். செய்வதறியாது திகைத்த பெண்ணின் பெற்றோர், சத்தம் போட்டு கூச்சலிட்டனர். ஒரு கட்டத்தில் பெண்ணின் பெற்றோர் தங்களுக்கு மகளே தேவையில்லை என்று கூறினர். இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் போலீசார் சண்டை போட்டுக் கொண்டிருந்த போதே, காதலிக்கு காதலன் தாலி கட்டிய சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பல வருடம் பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்களை உதறிவிட்டு, ஒரு வருடமே பழகிய காதலனை நம்பி செல்வதை கடுமையாக விமர்சிக்கிறார்கள். வாழ்க்கையை பற்றி சரியான புரிதல் இல்லாமல், அவசரமாக கல்யாணம் செய்யும் பெண்கள், ஆசைகள் முடிந்ததும், பொருளாதார சுமைகளை தாங்க முடியாமல் காதலன் கைவிட்டு செல்லும் போது நிற்கதியாகிறார்கள் என்று நெட்டிசன்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications