கருவிழிகள் முதல் சிறுநீரகம் வரை! மூளைச் சாவு அடைந்த முதியவரின் உறுப்புகள் தானம்!
திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி பகுதியைச் சோ்ந்த 64 வயது ஆண் ஒருவா், விபத்தில் தலையில் அடிபட்ட நிலையில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 19 ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவா்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவரின் உடல் உறுப்புகளை தானமளிக்க அவரின் உறவினா்கள் முன்வந்ததையடுத்து, மருத்துவக் குழுவினா், அவரது உடலுறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் தானமாகப் பெற்றனா்.
இவற்றை, தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில், உடலுறுப்பு வேண்டி பதிவு செய்தவா்களின் வரிசையின்படி, கல்லீரல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரு கைகள் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரு கண் விழிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள இரு பயனாளிகளுக்கும் தானமாக வழங்கப்பட்டது. உடலுறுப்பு தானமளித்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications