இத்தனை வார்ன் செய்தும் அடங்காத அல்போன்ஸ்.. சிறுமிகளின் படங்கள் அப்லோட்.. அள்ளித் தூக்கிய போலீஸ்!
ஆபாச வீடியோவை பதிவிறக்கம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
திருச்சி: போலீஸ் இவ்வளவு வார்ன் பண்ணியும் அல்போன்ஸ் மட்டும் அடங்கவே இல்லையே.. சிறுமிகள் ஆபாச படத்தை அப்லோடு செய்திருக்கிறார்.. இப்போது அல்போன்ஸை அப்படியே கொத்தோடு அள்ளி கொண்டு போய் உள்ளனர் திருச்சி போலீசார்!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி சில தினங்களுக்கு முன்பு, ''குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம்.
ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான். 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

காட்டு பகுதி
ஆனாலும் நெல்லையில் சில மாணவர்கள் அலட்சியமாக நினைத்தனர். மூன்றடைப்புப் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் காலேஜில் படிக்கும் மாணவர்கள், காட்டுப் பகுதிக்குச் சென்று ஆபாச வீடியோக்களை பார்த்து வருவதாக புகார் எழுந்தது... இதையடுத்து எச்சரிக்கையும் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

வார்னிங்
எனினும், இந்த கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸ்காரர் மிரட்டுவதுபோல ஒரு வாட்ஸ்அப் ஆடியோ வெளியானது. ''தம்பி.. நாங்க வார்ன் பண்ணியும், ஏன் திரும்பவும் இந்த மாதிரி வீடியோவை பார்க்கறீங்க?" என்று போலீஸ்காரரை போல ஒருவர் மிரட்ட.. அவரையும் நெல்லை போலீசார் கண்டறிந்து வழக்கு பதிவு செய்துவிட்டனர்.

எச்சரிக்கை
டிஜிபி எச்சரித்ததில் இருந்தே, இப்படி, குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் குறித்த செய்திகளும் பரபரப்பாகி கொண்டே வருகின்றன. அதனால் எப்படியும் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் சம்பந்தமான குற்றங்கள் குறையும் என்று எதிப்பார்க்கப்பட்ட நிலையில், திரும்பவும் அதுபோன்ற ஒரு குற்றம் நடந்துள்ளது பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

தீவிர நடவடிக்கை
திருச்சியில் சிறுமிகள் ஆபாச படத்தை பதிவேற்றம் நடப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ள நிலையில், ஆபாச படம் பதிவேற்றம் நடந்ததை கண்டு அதிர்ந்தனர்.. சம்பந்தப்பட்டர் யார் என்ன என்பதையும் ஐடி நம்பர் கண்டறிந்துவிட்டனர்.

ஆபாச படங்கள்
அந்த நபர் பெயர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்.. வயது 42 ஆகிறது.. பாலக்கரையை சேர்ந்த இவர்தான் அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்துள்ளார். "நிலவன் நிலவன்" என்கிற பெயரில் பேஸ்புக்கிலும் ஆபாச படங்களை தொடர்ந்து ஷேர் செய்து வந்துள்ளார். பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியும் உள்ளார் அல்போன்ஸ்.

விசாரணை
இவ்வளவு தகவல்களையும் துல்லியமாக திரட்டிய நம் போலீசார் அல்போன்ஸை கைது செய்துள்ளனர்.. அவரிடம் தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. குழந்தைகள் ஆபாச வீடியோவை பகிர்ந்த குற்றத்துக்காக கைதாகும் முதல் நபர் அல்போன்ஸ்தான்! குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விஷயத்தில் நம் போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வருவதும் தெளிவாகி உள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications