பிரதமரை நான் நம்புகிறேன்! தொடர்ந்து கோரிக்கையா வைக்கிறேன்னு நினைச்சுடாதீங்க! ஓபனாக பேசிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழ்நாடு அரசு சார்பில் தாம் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

மேலும், தொடர்ந்து தாம் கோரிக்கையா வைக்கிறேன்னு நினைச்சுடாதீங்க என்று பிரதமர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான தேவைகள் குறித்தும் விளக்கினார். திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் திறப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

CM Mk Stalin speech in Trichy Airport, I trust the Prime Minister Modi

இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிட்ட அவர் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிகரம் தொட்ட மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசு நிதியை விரைவாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெல் ஒப்பந்தப் பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 2 வழிச்சாலைக்கு சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்கு தர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தார்.

அதேபோல் சென்னை பினாங்கு, சென்னை டோக்கியோ இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்றும் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இவ்வாறு வரிசையாக மேடையில் பேசும் போது பிரதமருக்கு கோரிக்கையாக விடுத்த ஸ்டாலின், ஒரு கட்டத்தில் தொடர்ந்து தாம் கோரிக்கையா வைக்கிறேன்னு நினைச்சுடாதீங்க என்றும் அதை செய்து கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பற்றியும் விளக்கிக் கூறினார்.

மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக தாம் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக ஃபைனல் டச் கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+