திருச்சி சம்பவத்திற்கு பதிலடி தரணும்.. மோடி சைகைக்கு பதிலடி தரப்போகும் ஸ்டாலின்.. தேதி குறிச்சாச்சு!
திருச்சி: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். பிப்ரவரி 28ம் தேதி நடக்கும் இந்த விழாவில், ஸ்டாலின் முக்கியமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.
சமீபத்தில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. முன்புறம் கோவில் தோற்றத்திலும்.. பின் புறம் அல்ட்ரா மாடர்ன் தோற்றத்திலும் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

விமான நிலைய விவரம்: திருச்சி விமான நிலையத்தை 1.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். 4.5 மில்லியன் பயணிகளைக் கையாளும் நோக்கில், 60 கவுண்டர்களுடன் புதிய முனையம் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும், நான்கு உள்நாட்டு விமானங்களும் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன, மேலும் இரண்டையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மோடி வருகை: இந்த நிலையில்தான் இந்த விமான நிலையத்தை திறக்க பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தார், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது ‛‛மோடி.. மோடி..'' என பாஜகவினர் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மேடையில் இருந்து பிரதமர் மோடி காட்டிய சைகையால் அடுத்த சில நொடிகளில் அங்குள்ள நிலைமை மாறி பாஜக நிர்வாகிகள் அமைதியாகினர். திருச்சி புதிய விமான முனையம் திறப்பு நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல் முருகன், ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எவ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில்தான் இப்படி கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்தது. ஸ்டாலின் பேச எழுந்ததுமே நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவினர், ‛‛மோடி.. மோடி..'' என இடைவிடாது கோஷமிட்டனர். இந்த கோஷம் அரங்கத்தை அதிர வைத்தது. பாஜக நிர்வாகிகள் வரிசையில் முன் பக்கம் அமர்ந்ததும், திமுக நிர்வாகிகள் வரிசையில் கடைசியில் அமர வைக்கப்பட்டதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிலும் பாதி நிர்வாகிகள் கடைசி வரிசையில் அமர்ந்து இருந்ததால்.. திமுகவினர் சிலர் முன்கூட்டியே வெளியேறிவிட்டனர் என்று கூறப்படுகிறது..
அப்செட்: ஸ்டாலின் இந்த நிகழ்வால் கடுமையாக அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின். பிப்ரவரி 28ம் தேதி நடக்கும் இந்த விழாவில், ஸ்டாலின் முக்கியமான திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளாராம்.
அதன்படி திருச்சி சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை பாஜக நிர்வாகிகள் வரிசையில் முன் பக்கம் அமர்ந்ததும், திமுக நிர்வாகிகள் வரிசையில் கடைசியில் அமர வைக்கப்பட்டதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முறை திமுக நிர்வாகிகளையும் முன் வரிசையில் அமர வைத்து கடைசி முறை நடந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதாம்












Click it and Unblock the Notifications