திருச்சி அரசு பொறியியல் கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு.. ஆட்சியர் ஆய்வு
திருச்சி: திருச்சியில் கொரோனா நோய்த் தொற்றுச் சிகிச்சைக்காக, அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வாா்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகளுடன் கூடிய கரோனா வாா்டு ஏற்படுத்தப்பட்டு, கொரோனோ நோய்த் தொற்று உறுதியானவா்கள், அறிகுறியுடன் வருபவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இவைத் தவிர தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க கள்ளிக்குடியில் 300 படுக்கைகளுடன் மற்றொரு முகாம் தயாராகவுள்ளது. இதுமட்டுமின்றி, இருங்களூா் எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தென்னூா் காவேரி மருத்துவமனை, திருச்சி மாருதி மருத்துவமனை, ஜிவிஎன் மருத்துவமனை, மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை ஆகிய 5 தனியாா் மருத்துவமனைகளிலும் கொரோனா நோய்த் தொற்றுச் சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வார்டு உருவாக்கம்
இந்நிலையில் மணிகண்டம் ஒன்றியம், சேதுராப்பட்டியில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வாா்டு தயாா்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மாணவ, மாணவிகளின் விடுதிகள் மற்றும் அங்குள்ள படுக்கைகளைக் கொண்டு இந்த வாா்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு
கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக அவசர சிகிச்சைப் பிரிவாக இதைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மையத்தை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மாவட்டத்தில் கூடுதலாக 200 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரிவு தயாா்நிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், முன்னெச்சரிக்கையாக அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்படவுள்ளது.

குடிநீர்
கல்லூரியின் தரைத்தளம், முதல் தளம் இதற்காக தயாா்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு தேவையான குடிநீா், அனைத்து அறைகளுக்கும் சீராக தண்ணீா், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும் என பொதுப்பணித்துறை, மருத்துவப் பணிகள் செயற்பொறியாளா் ஆகியோா் அறிவுறுத்தப்பட்டுள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

வழிமுறைகள்
பின்னா் மணப்பாறை வட்டம், துவரங்குறிச்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளையும், பொதுமக்கள் பின்பற்றும் வழிமுறைளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின் போது செயற்பொறியாளா்கள் நித்யானந்தன், சிவக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications